India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக மத்திய பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், அவிநாசி அடுத்த பழங்கரை பகுதியைச் சேர்ந்தவர் அவந்திகா. அவருடைய தோழி மோனிகா. இருவரும் திருமுருகன்பூண்டி அருகே தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவந்திகாவின் வீட்டில் அவந்திகா மற்றும் அவரது தோழி மோனிகா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காங்கேயத்தில் வெள்ளகோயில் -செம்மாண்டாம்பாளையம் சாலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த, சரஸ்வதி மற்றும் ராகவி ஆகியோரது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்விபத்தில் காயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், செல்வி.யாழினி என்பவருக்கு, சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குக் கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில், வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் அடுத்த சின்னகரை லட்சுமி நகர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் சிலம்பரசன் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு, சிலம்பரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். பக்தர்கள் கனவில் தோன்றி ஆண்டவன் கூறிய பொருளை கொண்டு வந்தால், பொருளை பூ வைத்து உத்தரவு கேட்பார். அதில் அனுமதி கிடைத்தால் மட்டுமே உத்தரவு பொருள் மாற்றப்படுகிறது. இவ்வாறு நேற்று காசி தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்பட்டது.

திருப்பூர் மாநகரில் இன்று (09.12.2024), இரவு 11.00 மணி முதல், காலை 6.00 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில், பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவலர்களை, அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

திருப்பூரில், எம்.பி சுப்பராயன், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வாடகை கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது மூலம், திருப்பூரில் உள்ள, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மிகப்பெரும் பாதிப்பை அடையும். ஏராளமானவருக்கு தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய, ஜவுளி தொழிலை, பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில், உயர்த்தப்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி வரி, தொழிலை நாசம் செய்யும்” என தெரிவித்துள்ளார்

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக சொத்து உயர்வை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டி திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தங்கள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளைய தினம் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, இடுவம்பாளையம், கோவில் வழி உள்ளிட்ட 32 இடங்களில் கண்டன தெருமுனை பிரச்சாரம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.