India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு 5 நாள்கள் கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் நடைபெற்றது. இந்நிலையில் நாளைமுதல் வரும் 28ஆம் தேதிவரை தினமும் காலை 10 முதல் மாலை 5 மணிவரை கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி வழிகாட்டுதல் மையம் செயல்படும். கல்லூரியில் சேராத மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 523 மனுக்களை அளித்துள்ளனர்.
கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் 3 நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி பிரதான கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடையே பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமியிடம் விவசாயிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை அமராவதி பிரதான கால்வாயில் 220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
திருப்பூர் நாச்சிபாளையம் ஜி.என்.கார்டன் பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் – காங்கேயம் பிரதான சாலையில் அமர்ந்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவிநாசிபாளையம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருப்பூர்-சேலம் இடையேயான TNPL போட்டி, நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, அதிரடியாக விளையாடியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி, 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. திருப்பூர் அணி சார்பாக, துஷார் 79 ரன்களும், குரு 3 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் எனும் வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கலந்து கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 6 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதாலும், வானம் மேகங்கள் இன்றி தெளிவாக உள்ளதாலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருவிக்கு செல்ல
இன்று அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.