India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில் அரையாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் வெளியூர் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் தேவைக்கேற்ப சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழகம் ஆலோசித்துள்ளது. வாராந்திர சிறப்பு பஸ்கள் டிப்போக்களில் தயாராக உள்ளது. பயணிகள் எண்ணிக்கை பஸ் ஸ்டாண்டில் அதிகரித்தால், அதற்கேற்ப சிறப்பு பஸ் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், காளம்பாளையம் பகுதியில் உள்ள, செயல்படாத குவாரியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த, ரமேஷ் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்களுக்கு தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருப்பூர் பகுதியில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள், ஆகிய பகுதிகளில், திருட்டு, கொலை போன்றவை நடக்காமல் இருக்க, பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள், தோட்டத்து சாலைகள் ஆகியவற்றில், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், வளர்ப்பு நாய்கள் வைத்திருக்க வேண்டும், அவசர காலங்களில், 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற, பல்வேறு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ், காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்ட சிறையில் கைதி சூர்யா, கடந்த 21 ஆம் தேதி சிறையில் இருந்து தப்பிச்சென்றார். கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையின் உதவி சிறை அலுவலர்கள் கங்காராஜன், சீதா, முதல்நிலைக் காவலர் ராஜபாண்டி, இரண்டாம் நிலை காவலர்கள் சக்திவேல், ரவிக்குமார் ஆகிய 5 பேரை, பணியிடை நீக்கம் செய்து, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை நீதிமன்றத்திற்கு வந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என டிஜிபி தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் கோவிட் தொற்று ஊரடங்கிற்கு முன்பு மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் ஊரடங்கிற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு பிப்ரவரி 9ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு பேரவை துணைச் செயலாளர் பவித்ரா அர்ச்சனன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இன்றைய (டிச.23) நிகழ்வுகள் ▶திருப்பூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடகிறது. ▶திருக்குறள் விளக்க புகைப்பட கண்காட்சி, கருத்தரங்கம், திருக்குறள் பேச்சு போட்டி மாவட்ட மைய நூலகத்தில் நடக்கிறது. ▶ஆட்சி மொழி சட்டம் குறித்த விழிப்புணர்வு அவிநாசி அரசு கல்லூரியில் நடக்கிறது. ▶கடல் கன்னி பொருட்காட்சி காங்கேயத்தில் இன்று மாலை 4 மலை முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.

1.உழவர் பாதுகாப்பு திட்டம்; 1.43 லட்சம் பேர் சேர்ப்பு
2.திருப்பூர்: மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த படகு இல்லம்
3.திருப்பூரில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து
4.உடுமலையில் உள்ள பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
5.சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்த கார்

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம், விவசாய கூலித் தொழில் புரிந்துவரும் நபர்களுக்காக உழவர் பாதுகாப்புத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின்கீழ் 1,43,075 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பல்வேறு உதவி தொகைகள் வழங்கபடுகிறது. மேலும் தகுதியுடையோர் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 27ந் தேதி & ஜனவரி 3-ம் விண்ணபிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.