India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக லட்சுமி நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பூர் மங்கலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட 1.1 குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பொருட்களை பறிமுதல் செய்து மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறி தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 7) சிறப்பு கைத்தறி கண்காட்சி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இச்சிறப்பு கண்காட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கலந்துகொண்டு, பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். 20 சதவீத தள்ளுபடியும் உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
திருப்பூர் தெற்கு வட்டம் அலகுமலை அழகாபுரி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட 16.84 ஏக்கர் மற்றும் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பாத்தியப்பட்ட இருவேறு இடங்களில் மொத்தமாக ரூ.100 கோடி மதிப்பிலான 4.71 என 21.59 ஏக்கர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை கொளத்துப்பாளையம், பூனிவாடி ஊட்டி, கொளிஞ்சிவாடி, மணக்கடவு, மூலனூர், கன்னிவாடி, விஜிஎல் பட்டி, சிகே பட்டி, எல்எம்என் பட்டி, இஸ் பாளையம், கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், குருவப்பநாயக்கனூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தொமுச தொழிற்சங்கத்தில் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக அவலங்களை புகாராக அளிப்பதன் காரணமாக தனது வீட்டிற்கு அருகே தெரு நாய்களை விட்டுவிட்டு செல்வதாகவும், கழிவு நீரை அப்புறப்படுத்தாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி கோரிக்கை மனுவை மாலையாக அணிந்து வந்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 482 மனுக்களை அளித்துள்ளனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (6.8.24) குண்டடம் ஒன்றியத்தில் ஊதியூர் பழனி பாதயாத்திரை மண்டபத்தில் செங்கோடம்பாளையம், ஆரத்தொழுவு, பெருமாள்பாளையம், புங்கந்துறை, சங்கரண்டாம்பாளையம், சிறுகிணறு ஆகிய ஊராட்சிகளுக்கும், எலையமுத்தூர் கனகாம்பாள் திருமண மண்டபத்தில் குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, சின்ன குமாரபாளையம் ஆண்டியகவுண்டனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் கலெக்டர் கிருஸ்துராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து 17 மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணிகளை பாராட்டி சான்றிதழையும், பணியின் போது உயிரிழந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனராக, சென்னை ஆயுதப்படை ஐ.ஜி லட்சுமி பொறுப்பேற்றார். இவர் 1997ல் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யானார். விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றினார். நேர்மையான, துணிச்சல் மிக்க அதிகாரியான இவர், சில ஆண்டுகளுக்கு முன் சொந்தப்பணி காரணமாக விருப்ப ஓய்வு கோரிய போது அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மீண்டும் பணிக்கு வந்தார்.
Sorry, no posts matched your criteria.