India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தாராபுரம் அருகேயுள்ள, அலங்கியம் சாலையில், தனியார் ஹலோபிளக் கல் தயாரிக்கும் நிறுவனத்தின் அருகே, சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவரை, மர்ம நபர்கள், கட்டையால் அடித்து கொலை செய்யதாக கூறப்படுகிறது. அவரை காவல் துறையினர் நேற்று நள்ளிரவில் அவரது பிரேதத்தை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய தினம் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை மற்றும் இன்றைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொள்ளவில்லை. வாரம் தோறும் 400 மனுக்கள் பெறக்கூடிய இடத்தில் இன்றைய தினம் மிகவும், குறைவான மனுக்களை மக்கள் கொண்டு வந்திருந்தனர்.

திருப்பூர், கோட்டப்பாளையம் பகுதியிலிருந்து பல்லடம் நோக்கி, நேற்றிரவு, 10 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றது. பல்லடம், பனப்பாளையம் பகுதியில், வந்தபோது, சாலையோர பள்ளத்தில் பேருந்து இறங்கியது. அப்போது அங்கு வசிக்கும் ரத்னாம்பாள் என்பவரது வீட்டின் வளாகத்தில் அரசு பேருந்து புகுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் வேலம்பாளையம் 1வது வட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. ஆறாவது ஆண்டாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திமுக தொண்டர் ஒருவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடமணிந்து கலந்து கொண்டிருந்தார்.

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான வங்கதேச இளைஞர்கள் தங்கி இருப்பதாக கோவை தீவிரவாத தடுப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி பத்ரி நாராயணன் தலைமையிலான குழுவினர் பல்லடம் அருகே அருள்புரம், செந்தூரன் காலனியில் இயங்கிவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் போலியான ஆதார் அட்டைகளை கொடுத்து பணியாற்றி வந்த 28 வங்கதேச இளைஞர்களை கைது செய்தனர். இதேபோல் திருப்பூர் மாநகரில் 3 பேர் கைது கைதுசெய்யப்பட்டனர்.

திருப்பூரில் ஜன.21ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 10ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வட்டாரம் வாரியாக நடைபெற உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி, 31ம் தேதி, பிப்ரவரி மாதம் 7ம் தேதி ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். நள்ளிரவு முதல் திருப்பூரில் உள்ள பேருந்து நிலையங்களில் சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பனியன் நிறுவனங்கள் பொங்கல் பண்டிகைக்காக விடுமுறை தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மிக முக்கிய பொருளான கரும்பு உள்ளிட்ட பொருட்கள் தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக திருப்பூர் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஒரு ஜோடி 120 வரை விற்பனை செய்யப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 93வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருப்பூர் குமரன் சாலையில் திருப்பூர் குமரன் உயிர் நீத்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டு பெரியதோட்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டடத்தின் மேல் சுவர் பெரும்பாலும் இடிந்துவிட்டது. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மீது விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். ஆகவே கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்துவந்து பொங்கல் தொகுப்பு பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.