India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில், பொங்கல் விடுமுறை காரணமாக, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தால், திருப்பூரில் பரபரப்பாக காணப்படும் பகுதிகள் நேற்று, வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு, 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளும் தொடர் விடுமுறையில் இருப்பதால், திருப்பூர் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

நொய்யல் நதிக்கரையோரம் நடைபெற்று வரும் திருப்பூர் பொங்கல் திருவிழா 2025இல் கும்மி கலையை பயிற்றுவித்ததற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற ஆசிரியர் பத்ரப்பனுக்கு அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதே போல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் வெள்ளியங்காடு 60 அடி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 13ஆம் தேதி ராஜமாணிக்கம் மற்றும் பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற 68வது தேசிய பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 80 மீ தடை தாண்டும் போட்டியில், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியின் மாணவியும், தடகள வீராங்கனையுமான வர்ஷிகா முதலிடம் பெற்றதுடன், தங்கப்பதக்கம் வென்று, திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மடத்துக்குளத்தை சேர்ந்த முருகானந்தம், சில தினங்களுக்கு முன், பைக் திருட்டில் ஈடுபட்ட போது, பொதுமக்கள் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது காவல் துறையை ஏமாற்றி, முருகானந்தம் தப்பி ஓடினார். அவரை பிடிக்க ஆய்வாளர் அருள் தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு, பூளவாடி பகுதியில், பதுங்கியிருந்த போது, காவல்துறையினர், முருகானந்தத்தை கைது செய்தனர்.

கோலமிடுவதில் பலவகை உண்டு ரங்கோலி, புள்ளி வைத்த கோலம், டிசைன் போடும் என ஆனால் அதில் ஒரு செய்தியை தெரிவிப்பது என்பது மிக அரிது. மீறிப் போனால், பொங்கல் வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்து தீபாவளி வாழ்த்து ஆகிற தெரிவிப்பார்கள் ஆனால் ஒரு ஆங்கில பேராசிரியர் பாடம் எடுக்கும் விதமாக இவ்வகை கோலத்தை வரைந்துள்ளார். இதில் அவர் ஆங்கில இலக்கணத்தை புகுத்தியுள்ளார்.

தேசிய அளவில் இந்திய பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு குழுமம் சார்பில், கடந்த 7ஆம் தேதி முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் திருப்பூர் காதர் பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்ஷிகா 14 வயதிற்குட்பட்டார் பிரிவில் 80 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களின் செல்போன் எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று (ஜன.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரம் வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே இருசக்கர வாகன திருட்டில் கைது செய்து அழைத்து வரப்பட்ட முருகானந்தம் என்பவர், காவல்துறையை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் இன்று கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, மடத்துக்குளம் பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பதாகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்டு, முழு பயனாளி பங்களிப்பு தொகை செலுத்தியவர்களுக்கு மட்டுமே குடியிருப்புகள் ஒதுக்கப்படுகின்றன. எனவே போலி இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் SHARE செய்யவும்!
Sorry, no posts matched your criteria.