Tiruppur

News August 27, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு மழை

image

திருப்பூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக #IMD அறிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தின் காரணமாக கடந்த சில மாதங்களில் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News August 27, 2024

திருப்பூரில் 5 தாசில்தார்கள் இடமாற்றம்

image

திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி, தாசில்தார் நிலையில் அதிகாரிகள் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த செல்வி காங்கயம் அதிதிராவிடர் நல (நிலம் எடுப்பு) தனிதாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழக உதவி மேலாளராக சரவணன் ஊத்துகுளிக்கும் மாற்றம் செய்யபட்டனர்.

News August 26, 2024

திருப்பூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான, ராஜா ராஜ ராவ் வீதியில் அமைந்துள்ள, முரசொலி மாறன் வளாகத்தில், கருவம்பாளையம் பகுதி கழக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி நாகராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 26, 2024

திருப்பூரில் தீ பிடித்து எரிந்த இ-பைக்

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டை பருவாய் சாலையில் ஒரு இ-பைக் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து வாகன ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த இரு சக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 26, 2024

திருப்பூருக்கு அதிக அளவில் வரும் வட தொழிலாளர்கள்

image

திருப்பூரில் பனியன் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிப்பால் தொழிலாளர்கள் தேவை அதிகரித்துள்ளது. இங்கு தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்று வருகின்றனர். தற்போது வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி திருப்பூரில் குவிந்து வருகின்றனர்.

News August 26, 2024

2 நாய்களை அடித்துக்கொன்ற 20 பேர் மீது வழக்கு

image

திருப்பூர்: மூலனூரை அடுத்த முளையாம்பூண்டி மேட்டுப்புதூர் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சிலர் ஒரு நாயை தூக்கில் தொங்கவிட்டு கொன்றதும், மற்றோரு நாயை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதுகுறித்து பிராணிகள் வதை தடுப்பு சங்க அமைப்பினர் மூலனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News August 26, 2024

வருவாய்த்துறை பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்களுடன் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயராமன் ஆர்டிஓக்கள் செந்தில் அரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 25, 2024

திருப்பூர்: 1.100கிலோ கஞ்சா பறிமுதல்

image

காங்கேயம் அடுத்த வட்டமலை அனுகிரகா ஸ்பின்னிங் மில் அருகே, கஞ்சா விற்பதாக தாராபுரம் மது விலக்கு போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சந்து மகாஜன் (27) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News August 25, 2024

திருப்பூரில் போட்டியை துவக்கி வைத்த அமைச்சர்

image

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், முதலிபாளையம் சிட்கோவில் இன்று கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். இதில், திமுக மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாதன் கலந்து கொண்டார்.

News August 25, 2024

அவிநாசியில் விஜயகாந்த் பிறந்தநாள்: மா.செ. மரியாதை

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா அவிநாசி நகர தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது. மேலும் அவரது திருஉருவ படத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பிரசாத்குமார் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இனிப்புகள் வழங்கி நிர்வாகிகள் கொண்டாடினர்.

error: Content is protected !!