India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோத்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

பல்லடம் சாலை கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயா. கணவன் செந்தில்குமாரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீவனாம்சம் கேட்டு சமரச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இன்று மாலை விசாரணை நடைபெற்ற போது நீதிபதி முன் விசாரணை முறையாக நடைபெறவில்லை என கூச்சலிட்டுள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் ஜெயாவை கைது செய்தனர்.

திருப்பூர், ஊதியூர் அருகே டிராக்டரும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. ஊதியூர் அடுத்த கொடுவாய் நாட்டான்வலசு பகுதியில் இன்று மாலை பழனிக்கு தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடை பகுதியில் டிராக்டர் திரும்பியபோது தனியார் பேருந்து டிராக்டர் மீது மோதியது. இதில் லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்.

பல்லடம் சட்டமன்ற தொகுதி பல்லடம் நகர அதிமுக அவைத்தலைவர் பி.என்.பழனிச்சாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்றைய தினம் காலமானார். இதனை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு பள்ளி ஆசிரியரான சிவக்குமார் என்பவரை கைது செய்த நிலையில் வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை 4 வரை, வஞ்சிபாளையம், கணியம்பூண்டி, வேலம்பாளையம், பரமசிவம்பாளையம், ஊத்துக்குளி நகரம், ஊத்துக்குளி ஆர்எஸ், மொரட்டுபாளையம், பொதியபாளையம், உதியூர், கோமங்கலபுதூர், குண்டடம், கடைமடு, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, பூசாரிபட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான வருகிற 26ம் தேதி அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி வேண்டி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 318 மனுக்கள் பெறப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி தொழில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜவுளி உற்பத்திக்கு மூலப்பொருளான நூல் விலை கடந்த ஆண்டுகளில் நிலையில்லாமல் உயர்ந்து வந்தது. கடந்த நிதியாண்டு முதல் குறைந்து வந்த நிலையில் இந்த மாதத்திற்கான நூல் விலை 7 ரூபாய் குறைக்கப்பட்டு, இருப்பதாக நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர். இது ஜவுளி துறையினரிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

திருப்பூர் கல்லூரி சாலை பகுதியை சார்ந்தவர் சந்துரு. பெயிண்டர் ஆன இவர், 16 வயது சிறுமி ஒருவரை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியின் தாய் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கி உள்ளார். சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் வந்ததை அடுத்து, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வடக்கு மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிவு, செய்து சந்துருவை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.