Tiruppur

News September 2, 2024

பாமக மாநில துணை தலைவராக மன்சூர் நியமனம்

image

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவராக திருப்பூர் டிமான்டி முதல் வீதியைச் சேர்ந்த சையத் மன்சூர் உசேனை கட்சி நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார். கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட சையது மன்சூர் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News September 2, 2024

முதல்வர் கோப்பை போட்டிக்கு இன்று கடைசி நாள்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இம்மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்பதிவு ஆக.17ல் துவங்கி, கூடுதல் அவகாசத்துடன் இன்று (செப்.2) வரை வழங்கப்பட்டது.திருப்பூரைச் சேர்ந்தவர்கள் இன்று மாலைக்குள் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

News September 1, 2024

கருப்பன் வலசில் வெறிநாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் அருகே உள்ள கருப்பன் வலசு கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தோட்டத்தில் உள்ள ஆடுகள் பட்டியில் வெறிநாய்கள் புகுந்து 30 ஆடுகளை கடித்துக் குதறியது. வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 12 ஆடுகள் மற்றும் 18 குட்டிகள் பரிதாபமாக இன்று உயிரிழந்தது. இதனால் விவசாயி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 3.50 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 1, 2024

நல்லாசிரியர் விருது பெற 48 பேர் பரிந்துரை

image

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், தமிழக அரசு சார்பில் மாநில நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. இந்த விருது சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் மாநில அரசால் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இந்த விருது பெற 48 ஆசிரியர்களின் பெயர்கள் மாவட்ட கல்வித்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

News September 1, 2024

UPDATE: உடுமலை அருகே விபத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நேற்று சரக்கு வாகனம் கவிழ்ந்து 19 பேர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சின்ன பொம்மன் சாலையைச் சேர்ந்த வள்ளியம்மாள்(58) என்ற பெண்மணி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News September 1, 2024

லட்சம் கோடி இலக்கை நோக்கி அதிவேக பயணம்

image

திருப்பூரின் பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்களின் 90% சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களாக உள்ளன. மாநில மற்றும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான திட்டங்களை தொழில் துறையினர் பயன்படுத்த துவங்கியுள்ளதால், ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை நோக்கி திருப்பூர் பயணம் வேகம் பெற்றுள்ளது.

News September 1, 2024

திருப்பூரில் 51வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி

image

திருப்பூரில் 51ஆவது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி வரும் 4ஆம் தேதி துவங்கி 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது என பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தென்மண்டலத் தலைவர் சத்திவேல் கூறியுள்ளார். இதில், திருப்பூரைச் சேர்ந்த முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பங்கேற்கின்றனர்.

News August 31, 2024

ஊதியூர் அருகே கார் விபத்து 2 பெண்கள் உயிரிழப்பு

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், போக்குவரத்து நகரை சேர்ந்தவர் மதிவானன் (28). ஐடி ஊழியர். இவர் இன்று இரவு தாராபுரத்திற்கு காரில் மனைவி ராகவர்த்தினி (26), தாய் பாக்யலட்சுமி (55) மற்றும் மகனுடன் சென்றுள்ளார். அப்போது நொச்சிபாளையம் அருகே புளியரத்தில் கார் மோதியதில் பாக்யலட்சுமி மற்றும் ராகவர்த்தினி ஆகியோர் உயிரிழந்தனர். மதிவாணன் மற்றும் குழந்தை சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

News August 31, 2024

திருப்பூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 31, 2024

திருப்பூரில் ஓய்வூதியம்: விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழக அரசு விளையாட்டுத்துறையில் குறிப்பிட்ட வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் நாளை முதல் இணையதளம் வாயிலாக செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!