Tiruppur

News September 4, 2024

மக்கள் நல்வாழ்வு துறையின் ஆலோசனை கூட்டம்

image

மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் இன்று (04.09.2024) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் மரு.முரளிசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

News September 4, 2024

திருப்பூர்: சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடக்கம்

image

திருப்பூர் அவிநாசி அருகே உள்ள ஐ.கே.எப்.ஏ. வளாகத்தில் 51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சியை தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இன்று தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தென் பிராந்திய தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 6ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.

News September 4, 2024

திருப்பூர் அருகே பெண் உட்பட 2 பேர் கைது

image

திருப்பூர் தாராபுரம் ரோடு அரண்மனை புதூர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய விஜயபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ரம்யா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதேபோல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் இவரை கத்தியால் குத்திய வழக்கில் பாண்டியராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2024

உடுமலையில் நாளை மின்தடை

image

உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மால் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம் ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனசுப்பட்டி , தொட்டம்பட்டி, ஏரிபாளையம் ,புக்குளம் குறுஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, காந்திநகர், காந்திநகர் 2,சிந்துநகர் , ஸ்ரீராம் நகர், ஜீவா நகர் அரசு கலைக் கல்லூரி பகுதி, போடிபட்டி,
பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சி கோட்டை ஆகிய பகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி (காலை 9 மணி மாலை 4 மணி) மின்தடை

News September 3, 2024

திருப்பூரில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு 14 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

News September 3, 2024

திருப்பூர் வருகிற 10ஆம் தேதி வாகனங்கள் ஏலம்

image

திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 4 சக்கர வாகனங்கள் 4 மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 14 உட்பட மொத்தம் 26 வாகனங்கள் வருகிற 10 ஆம் தேதி காலை 10 மணியளவில் அவிநாசி மடத்துப்பாளையம் ரோடு, சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள திருப்பூர் மதுவிலக்கு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யும் முகாம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்று திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் மாற்றத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர்.

News September 3, 2024

போலீசார் துப்பாக்கி வைத்துக்கொள்ள எஸ்.பி உத்தரவு

image

திருப்பூர் மாவட்டத்தில் புற காவல் நிலையங்களில் மாலை மற்றும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் முதல் டிஎஸ்பி வரையிலான அலுவலர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார். குற்ற சம்பவங்களை தடுத்திடவும் பொது மக்களுக்கான பாதுகாப்பை அதிகரித்திடவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 549 மனுக்கள்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவ ஆட்சி தலைமையில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் 549 மனுக்களை அளித்துள்ளனர்.

News September 2, 2024

அதிவிரைவுப் படை போலீஸ்-க்கு புதிய சீருடை

image

திருப்பூர் மாநகர காவல் துறையில் அதிவிரைவு காவல் படையினர் பாதுகாப்பு பணி, விசேஷ காலங்களில் கூடுதல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட சீருடை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ராணுவ வீரர்கள் போன்ற மிடுக்கான சீருடை அதிவிரைவு படை போலீஸ் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!