India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையைச் சேர்ந்தவர் முத்தையன். இவர் திருப்பூர் குமார் நகரில் குடும்பத்துடன் தங்கி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தனர். இவர்களுக்கு அறிவித்தபடி வட்டியுடன் பணம் கொடுக்க இல்லை என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் முத்தையன் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 1993 பேர் காப்பீடு அட்டைக்கு விண்ணப்பம் செய்துள்ளனர் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருப்புராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், பல்லடம் எடுத்த செஞ்சேரி புத்தூர் பகுதியில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து அவ்வழியே சென்றவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த செல்வகுமார் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆண்டுக்கு வரும் ஜனவரி மாதம் சிறப்பு விருது பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவதற்கான விண்ணப்பித்தல் மற்றும் வழிமுறைகள் குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையான ஆவணங்களுடன் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வரும் 30ஆம் தேதிவரை மாவட்ட நிர்வாகம் அவகாசம் வழங்கியுள்ளது.
திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனி நிறுவனங்கள் சிலர் 6-6-2021 போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 7 சதவீத கூலி உயர்வை வழங்காததை கண்டித்து திருப்பூர் பனியன் தையல் நிலைய உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பனியன் கம்பெனிகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ‘நான் முதல்வன்’ உயர்வுக்குப்படி சேர்க்கை முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 3 கட்டமாக நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2022-23 மற்றும் 2023-24-ம் கல்வி ஆண்டுகளில் பள்ளி இறுதி தேர்வினை எழுதாத மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் கணக்கம்பாளையம் அருகே கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி பைனான்சியர் அன்பு என்பவர் 10க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்து பெங்களூரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான செல்லதுரை என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருப்பூரை அழைத்து வந்தனர்.
திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 600-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளது. இதற்காக ஆலங்காடு பகுதியில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் மதியம் 2 மணி முதல் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர போலீஸ் ஆணையர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.
கோவை – பீகார் மாநிலம் பருணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கோவை-பருணி ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நவம்பர் மாதம் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கோவையில் செவ்வாய்க்கிழமை காலை 11.50 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்கு பருணி சென்றடையும். இந்த ரயில் செவ்வாய்க்கிழமை மதியம் 12.40 மணிக்கு திருப்பூருக்கும் வந்து சேரும்.
திருப்பூரில் ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கை நாளை 11ஆம் தேதி திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இதில் 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், மற்றும் 9, 10, 11, 12 தேர்வில் தவறியவர்களும், கல்லூரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 97908-38912 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.