Tiruppur

News September 15, 2024

கல்யாண ராணியின் தோழி தமிழ்செல்வி கைது

image

திருப்பூர், தாராபுரம் பகுதியில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சத்யாவுக்கு ஆதரவாக திருமண மோசடியில் தோழியாக செயல்பட்ட தமிழ்ச்செல்வி இதுவரை தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை இன்று அனைத்து மகளிர் போலீசார் கரூரில் கைது செய்தனர்.

News September 15, 2024

திருப்பூர்: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

image

பல்லடத்தை அடுத்துள்ள அறிவொளிநகர் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை கடந்த 2 நாட்களாக உடல் நலக்குறைவால் (காய்ச்சல்) பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 15, 2024

ஓடும் ரயிலில் செல்போன் திருடிய இருவர் கைது

image

கோவையில் இருந்து சென்னை செல்லக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பள்ளி ஆசிரியர் மகேந்திரன் என்பவர் பயணித்துள்ளார். அந்த ரயில் திருப்பூர் வந்தபோது, ஜன்னல் வழியே அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பைக்குந்தா மற்றும் சந்தனு சக்ரியர் ஆகியோரை நேற்று கைது செய்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

News September 15, 2024

திருப்பூரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

வருகின்ற 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாது நபி விழா கொண்டாடப்பட உள்ளது. நபிகள் நாயகம் பிறந்த தினமாக கொண்டாடப்படக்கூடிய அன்னாளில் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரக்கூடிய மதுபான கடைகள் , அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிள் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் மதுபான கூடங்களை அடைக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 14, 2024

திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ காங்கேயத்தில் விவசாய கிணற்றில் விழுந்ததில் மொத்தமாக 16 ஆடுகள் உயிரிழந்தது. ➤ பல்லடத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபரின் விரலை உடைத்து விட்டதாக மனித உரிமை கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளனர். ➤ பல்லடம் அருகே பூமலூரில் காளை மாடு முட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ➤ ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து மல்லிகை பூ ரூ.500-ல் இருந்து ரூ.2,000 விற்பனை.

News September 14, 2024

தாராபுரத்தில் 13 மையங்களில் குரூப் 2 தேர்வு

image

திருப்பூர், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுகள் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 584 பேர் தேர்வு எழுதுவதற்கு தயாராக இருந்தனர். இந்நிலையில் சுமார் 2607 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 977 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News September 14, 2024

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

image

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி முதல் முதலமைச்சர் கோப்பைக்கான மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அனைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கிரிஷ் யாதவ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

News September 14, 2024

கறவை மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புரு செல் லியோஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சலும் கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி பதினெட்டாம் தேதி வரை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

News September 14, 2024

திருப்பூர் TNPSC மையத்தை கலெக்டர் ஆய்வு

image

திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 433 பேர் குரூப் 2 தேர்வை இன்று எழுத உள்ளார்கள். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, தாராபுரம் ஆகிய 3 தாலுகா பகுதிகளில்  53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜெய்வாபாய் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அப்போது தேர்வு மையத்தில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

News September 14, 2024

விரல் உடைத்த போலீஸ் மீது பாதிக்கப்பட்டவர் புகார்

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் அருள் பிரசாத். இவர் பனியன் தொழிலாளி. இவருக்கும் அருகில் வசிக்கும் முத்தம்மாள் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக அருண் பிரசாத்திடம் விசாரிக்க பல்லடம் போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது அருண் பிரசாத்தை போலீசார் தாக்கியதில் சுண்டுவிரல் உடைந்து விட்டதாக மனித உரிமை கவுன்சிலிடம் நேற்று புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!