Tiruppur

News February 1, 2026

திருப்பூர்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

திருப்பூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 1, 2026

திருப்பூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

திருப்பூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 03.02.2026 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.02) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியகவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News February 1, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் வடக்கு போலீசார், நேற்று ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தனிஷ்வர் முர்மு(42) என்பதும், அவரிடம் 230 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News January 31, 2026

திருப்பூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 31, 2026

திருப்பூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

திருப்பூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்த சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE பண்ணுங்க!

News January 31, 2026

குன்னத்தூர் மாணவன் சம்பவத்திற்கு போலீசார் விளக்கம்

image

குன்னத்தூரைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, சக மாணவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி எரியும் குப்பைக்குழியில் தள்ளிவிட்டதாகச் வெளியான செய்திக்குத் திருப்பூர் மாவட்டக் காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. காவல் துறை நடத்திய விசாரணையில், காயம் அடைந்த 13 வயது மாணவனும் மற்ற மாணவர்களும் ஒரே வகுப்பில் படிக்கும் நெருங்கிய நண்பர்கள் என்பதும். ஜாதி பெயரை சொல்லி திட்டவில்லை என போலீஸ் தகவல்.

News January 31, 2026

திருப்பூர்: Whatsapp-ல் HI சொன்ன போதும் வீடு தேடி வரும்! GAS

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 31, 2026

திருப்பூர்: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
வேலை தேடும் யாருக்காவது நிச்சயம் இது உதவும் இந்த தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

திருப்பூரில் மாணவர் பலி: டிரைவருக்கு 7 ஆண்டு சிறை

image

திருப்பூரில் கடந்த 2022-ல் கறிக்கோழி லாரி மோதி பொள்ளாச்சி கல்லூரி மாணவர் ஆரியன் உயிரிழந்த வழக்கில், திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, லாரி டிரைவர் ராஜ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பத்மா உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் விவேகானந்தம் ஆஜரானார்.

error: Content is protected !!