Tiruppur

News February 8, 2025

கொலை வழக்கில் ஆஜராகச் சென்றவரை கொல்ல முயற்சி

image

கொலை வழக்கில் விசாரணையில் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராக இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்களை காரில் வந்த மர்ம கும்மல் தாக்கியது. இதில் குட்டப்பாறையைச் சேர்ந்த அசோக் குமார் சந்திரசேகர் சகோதரரான இருவரும் சேர்ந்து சிவக்குமார் என்பவரின் தந்தை நாகராஜன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தனர். இந்த கொலைக்கு பழி வாங்குவதற்காக அசோக்குமாரை தாக்கினர். இதில் அசோக்குமார் படுகாயம் அடைந்தார்.

News February 8, 2025

டாஸ்மார்க் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

image

வள்ளுவர் நினைவு தினத்தையொட்டி வரும் 11ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, மதுபானக்கடைகள் (FL1), அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிழ்மன்றங்கள் (FL2) மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் (FL3) ஆகியவை அன்றைய நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

News February 7, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

News February 7, 2025

திருப்பூர் விபத்து: மேலும் ஒரு மாணவன் கவலைக்கிடம்

image

திருப்பூர் செங்கப்பள்ளி சாம்ராஜ் பாளையம் பிரிவு அருகே, நேற்று தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருப்பூரை சேர்ந்த குருராஜ் என்ற மாணவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளை சாவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

News February 7, 2025

பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் மீது வழக்கு

image

திருப்பூர்- ஈரோடு அருகே நேற்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் பேருந்தை இயக்கியதாக ஓட்டுநர் மாரசாமி, நடத்துனர் துரைசாமி 2 பேர் மீதும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2 பேரும் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News February 7, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் லோக் அதாலத்திற்கு இரண்டு நிரந்தர உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பாக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தகுதியான நபர்கள் திருப்பூர் மாவட்டம் சட்டப் பணிகள் ஆணை குழு தலைவரிடம் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News February 7, 2025

சிலம்பம் போட்டி: தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா தேசிய இளைஞர் விளையாட்டு மற்றும் கல்விக் கூட்டமைப்பு சார்பில் கோவாவில் சர்வதேச அளவிலான சிலம்பம் கலந்து கொண்டார். போட்டியில் தனித்திறன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில் மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News February 6, 2025

குண்டடம் சாலை விபத்தில் இரண்டு பேர் காயம்

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பிரிவுகள் இருந்து குண்டடம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் மோதி விபத்தில் உள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேருக்கு கால் முறிவு ஏற்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

News February 6, 2025

திருப்பூரில் வருவாய் ஆய்வாளர் 25 பேர் பணியிட மாறுதல்

image

ஊத்துக்குளி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை உள்ளிட்ட தாலுகாக்களில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைகள், மேல் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என டி.ஆர்.ஓ. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

News February 6, 2025

நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <>இங்கே கிளிக் <<>>செய்யவும். மேலும், 86108-06992 என்ற எண்ணுக்கு What’s App பண்ணுங்க.

error: Content is protected !!