Tiruppur

News April 9, 2024

பல்லடத்தில் நான்கு பேர் வெட்டி கொலை 15 ஆம் தேதி தீர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்தது. வருகின்ற 15ஆம் தேதி திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டது.

News April 9, 2024

திருப்பூர் அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் காரும் அரசுப் பேருந்தும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சந்திரசேகர், சித்ரா, இளவரசன், அரிவித்ரா, குழந்தை சாக்சி ஆகியோர் இறந்தனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சந்திரசேகர் தம்பதியினர் 60வது திருமண நாளுக்காக திருக்கடையூர் சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

News April 8, 2024

நாளை முற்றுகையிட போவதாக அறிவிப்பு

image

உடுமலை அருகே பொன்னாளம்மன் சோலையில் இன்று விவசாயி குணசேகரனை அதே பகுதியை சேர்ந்த திமுகாவை சேர்ந்த சதிஸ்குமார் என்பவர் திமுகவிற்கு ஏன் வாக்கு சேகரிக்க வரவில்லை எனக்கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நாளை ( ஏப்ரல் 9 ) உடுமலை பழனி சாலையில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்து உள்ளது.

News April 8, 2024

ஜி கே வாசன் பரப்பரை

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் ஏ பி முருகானந்தத்திற்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மூன்றாவது முறையாக மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைவது உறுதி எனவும் திருப்பூரிலும் பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

News April 8, 2024

திருப்பூரில் புத்தகம் வெளியிட்ட பிரகாஷ்காரத்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய சுப்பராயனுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கடந்த ஐந்து வருடத்தில் சுப்பராயன் மேற்கொண்ட பணிகள் 100 என்ற புத்தகத்தை பிரகாஷ்காரத் வெளியிட்டார்.

News April 8, 2024

ஆபத்தான வளைவு பகுதியில் தடுப்புச் சுவர் அவசியம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சி கோட்டையில் இருந்து சின்ன குமாரபாளையம் செல்லும் சாலை வழியை ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில் ஆபத்தான வளைவான இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த பகுதியில் தடுப்புச் சுவர் மற்றும் இரவில் ஒளிரும் பட்டை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்து உள்ளனர் .

News April 8, 2024

தீ வைக்கும் போதை ஆசாமிகளால் அபாயம்

image

காங்கேயத்தை அடுத்த கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அகிலாண்டபுரம் பிரிவில் காங்கேயம் ஒழுங்கும் முறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக போதை ஆசாமிகள் மது மற்றும் கஞ்சா போதையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வளாகத்தினுள் தீ வைத்து விட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

News April 7, 2024

திருப்பூர்:305 தபால் வாக்குகள் சேகரிப்பு

image

காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், சென்னிமலை ஆகிய பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கடந்த மூன்று நாட்களாக தபால் வாக்கு பதிவு பெறப்பட்டது. மாற்றுத்தறனாளிகள் மற்றும் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் உள்ள வீடுகளில் நேரில் வாக்கு சேகரிப்பு நடத்தினர். இதில் மொத்தம் 315 வாக்குகளில் நேற்று வரை கடந்த 3 நாட்களில் 305 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>-1 <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பரப்புரை

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் சட்டப்பேரவை தொகுதியில் நேற்று மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் இந்திய கூட்டணியில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.