India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திரா பிரியதர்ஷினி, நித்யா, சுபாஷினி ஆகிய 3 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த குரூப்-1 தேர்வில் நித்யா உதவி ஆட்சியராகவும், இந்திரா பிரியதர்ஷினி வணிக வரித்துறையில் உதவி ஆணையராகவும், சுபாஷினி கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராகவும் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் பாலப்பம்பட்டியில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். இதே போல திருப்பூர் செஞ்சேரிமலை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் எரிப்பாளையம் சர்வீஸ் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து பழனி தேசிய நெடுஞ்சாலை இணையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் அருகே கூட்டுப் புலி என்ற இடத்தில் கோழி லோடு ஏற்றச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் நேற்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழங்கியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் அருகே கூட்டுப் புலி என்ற இடத்தில் கோழி லோடு ஏற்றச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் நேற்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழங்கியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தேரோட்டம் நடைபெற்ற நிலையில்நேற்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரை வாகனத்தில் மூலவர்கள் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் தண்டவாள பராமரிப்பு காரணமாக கோவை , திருப்பூர் , ஈரோடு வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் எட்டு வாராந்திர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.இந்த ரயில்கள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
காங்கேயம் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பீகார் மாநிலம் ஜெயின் போர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து அங்குள்ள விடுதியில் தங்கி வருகின்றனர். இந்நிலையில் ராஜேஷ் பைட்டா என்பவரது மகன் குமாரும் தனது உறவினர்களுடன் தங்கி இந்நிலையில் பவன் குமார் வயது 12 சிறுவன் ஏணியில் ஏறி துணியை எடுக்க முயன்ற போது கீழே விழுந்து பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
வெள்ளகோவில் முத்தூர் ரோடு அறிவொளி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ராஜேஷ்குமார் (34). இவருக்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி தர்ஷினி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் வெள்ளகோவில் கோவை ரெகுலர் சர்வீஸ் வேன் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று நடந்து சென்ற போது பஸ் மோதி இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 7,91,27 ஆண்களும் 8 லட்சத்து 17 ஆயிரத்து 239 பெண்களும், 285 மூன்றாவது பால் இனத்தவர் என மொத்தம் 16,8521 வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 4.75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என அதிர்ச்சி தகவல் இன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
Sorry, no posts matched your criteria.