India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாராபுரம் பூளவாடி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 17 மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் செய்ததாக விடுதி காப்பாளர் சரண் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளை பாலியல் செய்தது ஈடுபட்ட போது அதற்கு உறுதுணையாகவும் இருந்த மேலும் இரண்டு பேரை தாராபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம் போல வாடி சாலையில் உள்ள தனியார் பள்ளி 17 மாணவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு சீல் வைக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகின்ற 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
உயர் கல்வி வழிகாட்டி மையங்களை மூலம் போட்டி தேர்வுக்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது, மாவட்ட அளவில் உயர் தொழில் நுட்ப வசதியுடன் செயல்படும் 87 மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி மையங்களாக தேர்வு செய்யப்பட்டு விரைவில் பயிற்சி துவங்க உள்ளது, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பயிற்சிகள் வழங்கப்படும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
திருப்பூர் மாநகராட்சி ,நகராட்சி, பேரூராட்சி, சிறப்பு நிலை ஊராட்சிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்து சில மாதங்களிலேயே பழுதாகி உள்ளன. பழுது நீக்க பிரத்யேக நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லாததால் வாகனங்கள் கிடங்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீதிகள் தோறும் குப்பையில் சேகரிப்பது அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: வேலம்பட்டி சுங்க சாவடியை அகற்றக்கோரி நவம்பர் 12 பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராடி வந்த நிலையில் இதை அடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையை நடத்திய நிலையில் சுங்கச்சாவடியின் ஒரு பகுதி அகற்றப்பட்டு விவசாயிகள் மற்றும் உள்ளூர் பொது மக்கள் இலவசமாக சென்று வர நவம்பர் 13 ஆட்சியர் உறுதியளித்ததாக அதன் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை பள்ளி விடுதி காப்பாளர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாராபுரம் போலீசார் இன்று அதிகாலை நான்கு மணி வரை காவல்துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் விடுதி காப்பாளரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் கடந்த எட்டாம் தேதி முதல் 10ம் தேதி வரை மாநில ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன் போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 38 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அணி மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தது.
திருப்பூர் மாவட்டத்திலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறுந்தொழில் நிறுவனங்கள், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும்போது, ‘3ஏ1’ கட்டண விகிதத்தை நிர்ணயிப்பதற்கு பதில், மின்வாரியம் வார்த்தைகளால் விளையாடுவதாக, குறுந்தொழில் முனைவோர் வேதனை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் அரசு தலையிட்டு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உரிய சலுகையை கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அம்மன் நகரை அடுத்த தாய் மூகாம்பிகை நகர் குப்பைமேட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தபோது பிறந்த சில மணி நேரமே ஆன உடலில் ரத்தங்களுடன் கூடிய ஆண் குழந்தை இருந்துள்ளது. உடனடியாக வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருப்பூர் மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.