India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் தனியார் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் பள்ளி அலுவலக இ-மெயில்-க்கு வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. உடனே பள்ளிக்கு விடுமுறை அளிக்கபட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியின் அனைத்து இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்ததில் எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இந்த தகவல் பொய்யானது என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2025 குடியரசு தினத்தன்று புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அப்போது திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் கிணத்துகடவு, பொள்ளாச்சி, ஆனை மலை, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் தாலுக்காக்களை பிரித்து பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதுபோன்று முன்பு பழனி மாவட்டமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
மேற்கு மண்டல தபால் துறை சார்பில் ‘போஸ்டல் பிரீமியர் லீக்-2024’ எனும் கிரிக்கெட் போட்டி நேற்று கோவையில் துவங்கியது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி உட்பட ஏழு கோட்ட அணிகள் பங்கேற்கின்றன. நேற்றைய முதல் போட்டியில், கோவை எம்.எம்.எஸ்., அணியினரும், திருப்பூர் தபால் கோட்ட அணியினரும் விளையாடினர். இதில் திருப்பூர் அணி முதல் போட்டியிலேயே 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
திருப்பூர் வடக்கு தாலுகா பகுதி 1 மிமீ, குமார் நகர் பகுதி 14.40 மிமீ, திருப்பூர் தெற்கு 7 மிமீ, கலெக்டர் அலுவலகம் 9 மிமீ, அவினாசி 4 மிமீ, ஊத்துக்குளி 5.20 மிமீ, பல்லடம் 7 மிமீ, தாராபுரம் 11 மிமீ, மூலனூர் 3 மிமீ, குண்டடம் 5 மிமீ, உப்பாறு அணை 6 மிமீ, நல்லத்தங்காள் ஓடை அணை 25 மிமீ, காங்கயம் 9 மிமீ, வெள்ளகோவில் 3 மிமீ, வட்டமலைகரை ஓடை அணை 5.60 மிமீ. மழை நேற்று பதிவானது.
திருப்பூரில் தன்னார்வ அமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து நிகழ்ச்சி, 16ம் தேதி தெற்கு ரோட்டரி கிளப் அரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சி மதம் மாற்றும் நோக்குடன் நடந்துள்ளதாகவும், மேயர் தினேஷ்குமார் மற்றும் திமுக பிரமுகர்கள் பங்கேற்றதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா பகிரங்கமாக குற்றம் சாட்டிய நிலையில், இது உண்மையில்லை என மேயர் தினேஷ்குமார் நேற்று மறுப்பு தெரிவித்தார்.
திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் , கடந்த ஒரு வாரத்தில் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி ஆகாத வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஈரோட்டில் நடந்த மாநில தடகளப் போட்டியில், திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் இரண்டு தங்கம் உள்பட 14 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். நவ 6 முதல் 8ஆம் தேதி மாணவருக்கும், 9 முதல் 11ஆம் தேதி வரை மாணவியருக்கும் மாநில தடகளப் போட்டி நடந்தது. மாவட்ட தடகள போட்டியில் அசத்திய 70க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மாநில போட்டியில் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.
ஈரோட்டில் நடந்த மாநில தடகளப் போட்டியில், திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் இரண்டு தங்கம் உள்பட 14 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். நவ 6 முதல் 8ஆம் தேதி மாணவருக்கும், 9 முதல் 11ஆம் தேதி வரை மாணவியருக்கும் மாநில தடகளப் போட்டி நடந்தது. மாவட்ட தடகள போட்டியில் அசத்திய 70க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மாநில போட்டியில் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.
தாராபுரம் பகுதியில் அவ்வப்போது மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் மனிதர்கள் ரெயின் கோட் போன்ற உடைகளை அணிந்து தங்களை நனையாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மழையில் நனைந்தபடி மேய்கிறது. இந்த நிலையில் தனது மாட்டிற்கு விவசாயி ஒருவர் பிளாஸ்டிக் பைகளை கவச உடையாக அணிவித்து மழையிலிருந்து மாட்டை பாதுகாத்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.