India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 12 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றது. பல்வேறு கல்வி தகுதியுடைய 176 போ் கலந்து கொண்டனா். அவா்களுக்கு பல்வேறு தோ்வுகள் நடத்தப்பட்டு அதில் 35 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கான பணி ஆணையை மாவட்ட வேலைவாய்ப்பபு அலுவலர் கஸ்தூரி வழங்கினார்.
ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் 29/9/2024 அன்று காலை 6 மணியளவில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள் 17 வயது முதல் 25 வயதுக்குள் ஆண் பெண் என இரு பிரிவினருக்கும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் என இரு பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அனைவரும் உடற்தகுதி சுய உறுதிமொழி படிவம் நேரில் வந்து தர வேண்டும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஜோலார்பேட்டை உள் விளையாட்டரங்கில் வருகின்ற 28/9/2024 அன்று அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 13,15,17 வயது ஆண் பெண் இரு பிரிவினருக்கு 10 கி.மீ முதல் 20 கி.மீ வரை மிதிவண்டி போட்டி நடைபெறும். இப்போட்டியில் பங்கேற்கும் ஆண் பெண் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடல் தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் கையெழுத்துடன் பூர்த்தி செய்து விளையாட்டு அரங்கில் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. உங்க பகுதியில் போதுமான மழை பெய்கிறதா? கமெண்ட்ல செல்லுங்க.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் “தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல தற்கொலை எண்ணத்தை தவிர்ப்போம்” மேலும் தற்கொலை எண்ணம் தோன்றினாள் 104 என்ற எண்ணை அழைக்கவும் என விழிப்புணர்வு பேனர் வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியிலன பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதையும் சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மு. ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், வார்டு உறுப்பினர் அளித்த மனுவின் படி ஊராட்சி தலைவர் பதவியை பொதுப்பிரிவு அல்லது பழங்குடியின் பெண்ணுக்கு 4 வாரங்களில் ஒதுக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பத்தூர் பொம்மிகுப்பம் துணை சுகாதார நிலையம் முன்பு செயல்பட்டு வந்த மருந்தகத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று மாலை மருத்துவ இயக்குனர் நடத்திய அதிரடி ஆய்வில் மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது. மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வந்த 5 மருந்து கடைகளுக்கு சீல் வைத்து. மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நல திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ( LPG) மூலமாக இயக்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பம் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். ஷேர் செய்யவும்.
திரும்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு கவியரசு(9) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பும் படித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி கவியரசனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர் உறுதி செய்தார். இதற்கு கவியரசன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கவியரசு இன்று உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.