India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்ட முகாம் சாா்பாக மாதனூா் அருகே ஆா்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் கல்லூரி மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். இயற்கை வளங்களை காத்தல், மண் வளத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் இறைச்சி கடைகளில் உள்புற சுவற்றில் கட்டாயம் டைல்ஸ் போட்டு இருக்க வேண்டும். இறைச்சி கடைகளில் தூசி படியாமல் சூரிய ஒளி படாமல் இறைச்சிகள் விற்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை நகராட்சி ஆணையாளர் சந்தானம் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார். சுற்றறிக்கை கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட பிரிவு சார்பில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் ஜோலார்பேட்டை பகுதியில் கடந்த 29 ம் தேதி துவங்கி நேற்று வரை தொடர்ந்து 15 நாட்கள் வரை நடைபெற்றது. நிறைவு விழாவானது இன்று நடைபெற்றது. இதில் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு விளையாட்டு உடைகள் வழங்கப்பட்டது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருப்பத்தூர் மாவட்டம் 34ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 80.98% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 73.14 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 87.73 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் 81.79% பேரும், மாணவியர் 91.43% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 86.88% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
திருப்பத்தூர் குண்டு ரெட்டியூரை சேர்ந்த காளிதாஸ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணனும் இணை பிரியா நண்பர்கள் ஆவர். இந்நிலையில் காளிதாஸின் மனைவிக்கும் சரவணனுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை காளிதாஸ் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சரவணனும், அவரது மனைவியும் தனிமையில் இருப்பதை கண்ட காளிதாஸ் ஆத்திரத்தில் சரவணனை கொலை செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 96.98 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 78.62 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து வருகின்ற 25 ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல தயாராகி வரும் நிலையில் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி இன்று முகாமை துவக்கி வைத்தார். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 329 பேர் ஹஜ் யாத்திரை பயணம் செல்வதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் திருப்பத்தூர் போலிஷ் ஸ்டேஷன் ரோடு அருண் மஹால் திருமண மண்டபத்தில் நாளை ஆசோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி மாநில, மாவட்ட, நகர ஒன்றிய பேரூர் மற்றும் கிராம நிர்வாகிகள், துணை அமைப்புகள் பிரிவுகள் நிர்வாகிகளும் தேசிய தோழர்களும் தவறாமல் பங்கேற்க மாவட்ட தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக மாநில பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்த கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சும்சுதீன் சலீம் (49). இவர் இன்று ரயிலில் பயணம் செய்த போது திருப்பத்தூர் அருகே திடீரென மயங்கி கிடந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.