India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் அடுத்த கோனாபட்டு பகுதியில் இயங்கி வரும் தற்காப்புக்கலை பயிற்சி வகுப்பு மூலமாக திருப்பத்தூர் மாவட்ட மாணவர்கள் அனைவரும் சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற ஆஸ்கர் உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து 40 நிமிடம் சிலம்பம் மற்றும் கராத்தே செய்து உலக சாதனை செய்து திருப்பத்தூருக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவிக்கலாமே.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் க்ரைம் துறை சார்பில் பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய இணையதளங்களில் தள்ளுபடிகள் அறிவித்து தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் மோசடி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் சற்று முன்னர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே ஏ.கே.மோட்டூர் ஊராட்சி புதுபூங்குளம் குமரன்நகரை சேர்ந்தவர் காந்தி (60), விவசாயி. இவருக்கு ராஜீவ் காந்தி என்ற மகன் உள்ளார். இவர்களது தோட்டத்தில் விளைந்த ரோஜா பூக்களை விற்பனைக்கு பறிக்க காந்தி செல்லாததால், அவருக்கும் அவரது மகனுக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜீவ் காந்தி அவரது தந்தையை கட்டையால் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று (அக் 19) கந்திலி, குருசிலாபட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்று சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்கள், தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருது பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை அக்டோபர் 21 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஊர்காவல் படையினருக்கு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்கான அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கான சீருடைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இன்று காலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்காவல் பிரிவு ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வுவை மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 3503 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பேஸ்புக் வலைத்தளப் பதிவில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், கடுமையான மழைப்பொழிவு பெய்யும் நேரங்களில் வாகன ஓட்டிகள் ஹெட்லைட்டை ஒளிர விட்டபடி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.