India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ. வேலு இன்று காலை 10 மணியளவில் துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவில் திருவண்ணாமலை பாரளுமன்றம் உறுப்பினர் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், நகரம், கிராமிய காவல்நிலையங்கள் மற்றும், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (27.10.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கீழ் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் அவரது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காகச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திம்மாம்பேட்டை அருகே உள்ள சிமக்கம்பட்டு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் நிறுவனங்களுக்கு மனித விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர், டிச.3ஆம் தேதி அன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. விருதுக்கான விண்ணப்பங்களை https/ awards.gov.in என்ற வலைத்தளம் மூலம் நாளை வரை விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று (அக்.27) தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருந்தார். எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்து திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வி.சி.முனிசாமி, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அனைவரும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெயர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண்களை இன்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்ரேயா குப்தா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான 2 கிலோ திமிங்கல மீன் எச்சம் (உமிழ்நீர்) வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல மீன் எச்சம் (உமிழ்நீர்) பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிர்வரும் நவ.3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று முதலமைச்சர் சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை பெற அக்.28 ஆம் தேதி அன்று 5.45 மணிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று கந்திலி, குருசிலாபட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஏலகிரி பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் தற்போது மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.