Tirupathur

News October 30, 2024

ஜோலார்பேட்டை அருகே ஆஞ்சநேயர் ஆலயத்தில் பிரதோஷ புஜை 

image

ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம். வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு இன்று மங்களவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இவ்விழாவில் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

News October 29, 2024

ஜோலார்பேட்டை அருகே 6 ஆடுகள் திருடிய 2 பேர் கைது

image

ஜோலார்பேட்டை அடுத்த வெளள்ளைய கவுண்டனூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் நேற்று இரவு தனது விவசாய நிலத்தில் 6 ஆடுகளை ஆட்டுக்கொட்டையில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது 6 ஆடுகள் காணவில்லை. இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில், சின்னபொன்னேரி சேர்ந்த அஜித் மற்றும் குன்னத்தூரை சேர்ந்த ஸ்ரீராகுல் ஆகிய 2 பேர் ஆடுகளை திருடி சந்தையில் விற்கும்போது இருவரையும் கைது செய்தனர்.

News October 29, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (29.10.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்களை மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

News October 29, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவுரை

image

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடைவீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் உங்களது உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள மாவட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, துணி, பட்டாசு, நகை, மளிகை பொருட்களை வாங்க செல்லும் மக்கள் உஷாராக இருங்கள். 

News October 29, 2024

 வருவாய் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

image

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை 14,000 ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் வருவாய் துறை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 29, 2024

திருப்பத்தூர் கலால் உதவி ஆணையர் பணியிட மாற்றம்!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் கலால் உதவி ஆணையர் ஜோதிவேல் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் தனித்துணை ஆட்சியர் தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணி மாற்றம் செய்து தலைமைச் செயலக முதன்மை செயலாளர் அமுதா ஆணை பிறப்பித்துள்ளார்கள். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சேலத்தில் பணியாற்றி வரும் முருகன் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நியமனம் செய்த உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

News October 29, 2024

திருப்பத்தூர் அருகே விபத்தில் தலை நசுங்கி மரணம் 

image

வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியில் அரசு பேருந்து இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அதே பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் இருசக்கர வாகனம் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 28, 2024

இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் 

image

திருப்பத்தூரில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், நகரம், கிராமிய காவல்நிலையங்கள் மற்றும், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று  ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

News October 28, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி விளம்பரம் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் குறைந்த விலைக்கு பட்டாசுகளை விற்பதாக வரும் போலி விளம்பரத்லிங்க்குகளை கிளிக் செய்யவோ அல்லது பகிரவோ வேண்டாம் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 28, 2024

அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதே பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனடியாக மதியழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!