India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய செய்தியில் வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்து சரியான தகவல்களை தெரிந்து கொண்ட பின்பு விண்ணப்பிக்கவும். மேலும் பணம் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை கொடுத்து ஏமாற வேண்டாம். இது போன்ற சைபர் கிரைம் மோசடிகள் குறித்து https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.

திருப்பத்தூர் மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

திருப்பத்தூர அடுத்த கரியம்பட்டியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மகளிர் சுய உதவி குழுவின் அங்காடி மூலம் அமைக்கப்பட்ட சிறுதானிய உணவகம் நேற்று (ஜன.5) திறக்கப்பட்டது. இதில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசொளந்தரவல்லி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

ஆம்பூரில் சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று (ஜன.6) ஈரோட்டில் இருந்து காட்பாடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர்- மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் திருப்பத்தூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் திருப்பத்தூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர் நேற்று (ஜன.4) இரவு பெற்றோர் கண்டித்ததால் கோபத்தில் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூரை சேர்ந்த காய்கறி வியாபாரி சவுந்தர்ராஜன். இவர் நேற்று (ஜன.5) பணம் எடுக்க பீரோவை திறக்க முயன்றபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த 9½ பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர், மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடைய சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று ஈரோட்டில் இருந்து காட்பாடி வரை டிக்கெட் எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில் ஆம்பூர் அருகே மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.