India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஆலங்காயம் ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி பகுதியை சேர்ந்த ரத்தினம் (67) விவசாயி பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று(மார்ச்.21) இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உரிமம் பெற்ற 177 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது உரிய ஆவணமின்றி ஏடிஎம் வாகனம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65.90 லட்சம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 20 காவல்துறை அதிகாரிகள் மூலம் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மேலான தகவல்களுக்கு 9042822722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் பதிவு உயர்வு பெற்ற தலைமை ஆசிரியராக கடந்த ஆறு மாத காலமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பலமுறை வலியுறுத்தியும் ஊதியம் வழங்காமல் இருக்கும் மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கௌகாத்தி ரயில் நிலையத்தில் பெங்களூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் வந்து நின்றது. அப்போது இன்ஜினில் இருந்து 11-ஆவது பெட்டி சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் கிரீஸ் இல்லாததால் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனால் அந்த பெட்டியை கழட்டி விட்டுவிட்டு ரயில் பெங்களூர் நோக்கி சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர் .
வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் 20.03.2024 இன்று காலை 9 மணியளவில் விவசாய கிணற்றில் பெண் சடலம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரணையில் வாணியம்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்த மது பிரியா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதுயொட்டி பாமக, பாஜகவினர் உடன் கூட்டணி அமைத்து கொண்டனர். இன்று ஜோலார்பேட்டை நகர பாஜகவினர் அப்பகுதியில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் நடராஜன், டி.கே.ராஜா மற்றும் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கிருபாகரன் ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து மேலும் தேர்தலில் கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஜோலார்பேட்டை போலிசார் இன்று(மார்ச்.20) அதிகாலை மாக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெளி மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து முனியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.