Tirupathur

News February 1, 2026

திருப்பத்தூர்: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

திருப்பத்தூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

திருப்பத்தூர்: தண்ணீரால் வந்த வினை!

image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அனுமுத்து. இவர் நேற்று (31.01.2026) அதேபகுதியில் உள்ள தனது, விவசாய நிலத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக, மின்சாரம் பாய்ந்து அனுமுத்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து வாணியம்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News February 1, 2026

திருப்பத்தூர் தாய்மார்களுக்கு ரூ.11,000

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

திருப்பத்தூர்: மதுபோதையில் நண்பரை கொன்ற கொடூரம்!

image

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த அப்புனு(40) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோகுலை, ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 1, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10:00 மணி முதல் இன்று (பிப்ரவரி.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

திருப்பத்தூர் பெண்களுக்கு அரிய வாய்ப்பு – ரூ.3 லட்சம் மானியம்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 31, 2026

திருப்பத்தூர்: தமிழ் தெரிந்தால் வங்கியில் வேலை ரெடி!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

திருப்பத்தூர்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள்; APPLY!

image

திருப்பத்தூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 31, 2026

திருப்பத்தூர்: இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வேண்டுமா?

image

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற இலவச கேஸ் அடுப்பு, சிலிண்டர் மற்றும் ஒவ்வொறு முறை சிலிண்டரை நிரப்பும் போதும் ரூ.300 மானியம் வழங்கும் சூப்பர் திட்டம் உள்ளது. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேவைப்படுவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியை(04179-220091 9445000190) தொடர்பு கொள்ளவும்.*செலவை குறைக்க செம திட்டம்.அனைவருக்கும் பகிரவும்*

News January 31, 2026

திருப்பத்தூர்: கரண்ட் கட்? Whatsappல் தீர்வு!

image

திருப்பத்தூர் மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!