Tirupathur

News April 9, 2024

வாணியம்பாடி: நடவடிக்கை எடுக்குமா பறக்கும்படை

image

மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் கட்சி கொடிகள் துணிகளை வைத்து மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி நகர பகுதியில் அதிமுக சின்னம் இரட்டை இலை திறந்த நிலையில் இருப்பதால் அவற்றை மூட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News April 9, 2024

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட துண்டு பிரசுரங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் பச்சகுப்பம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பகுதியில் நேற்று தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில் பாஜக கட்சியின் 15300 தோ்தல் துண்டுப் பிரசுரங்கள் அனுமதியின்றி கொண்டு சென்றது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பெலிக்ஸ் ராஜாவிடம் ஒப்படைத்தனர்.

News April 9, 2024

குறைந்த வாடகை கட்டணத்தில் டிராக்டர்

image

ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய டிராக்டரை மிகவும் குறைந்த வாடகை கட்டணத்தில் பயன்படுத்த
கேத்தாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகத்தில் செயலாளரை தொடர்பு கொண்டு இன்று முதல் குறைந்த வாடகையில் டிராக்டரை எடுத்து செல்லலாம் என செயலாளர் அறிவித்துள்ளார்.

News April 8, 2024

வாணியம்பாடி: தனியார் வங்கி பணம் பறிமுதல்

image

 திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாணியம்பாடி பகுதியில் வாகன சோதனை செய்யும் போது உரிய ஆவணங்கள் இன்றி ஏடிஎம்மில் பணம் நிரப்ப கொண்டு சென்ற பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News April 8, 2024

வாணியம்பாடி: கால்வாயில் சிக்கிய வாகனம்

image

வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவு கட்டடத்தில் இன்று திடிரென தீ விபத்து ஏற்பட்டது.  உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வாகனம் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிக்கி கொண்டது. தீயை அணைக்க முடியாத நிலையில்,  அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் காணப்பட்டது.

News April 8, 2024

வாக்காளர் குடும்பங்களுக்கு அஞ்சல் அட்டை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்சியர் தர்ப்பகராஜ் முதற்கட்டமாக 1000 வாக்காளர்களின் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் பணியினை மேற்கொண்டார்.

News April 8, 2024

வாணியம்பாடி அருகே நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

image

வாணியம்பாடி அடுத்த காவாய் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30).  இவர் நேற்று விடுமுறை தினம் என்பதால் மாலை 4 மணி அளவில் புல்லூர் அடுத்த கனக நாச்சி அம்மன் ஆலயம் பாலாற்றில் குளிக்கச் சென்றார்.  அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News April 7, 2024

திருப்பத்தூர்: திடீர் ஆய்வு

image

வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ப்பகராஜ் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தல் தபால் வாக்கு பதிவு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/<<>> என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 6, 2024

ஜோலார்பேட்டை அருகே இளம் பெண் மீட்பு

image

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி சேர்ந்த திவ்யா இவர் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தந்தை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலிசார் விசாரணை செய்த நிலையில் இன்று தி.மலை மாவட்டத்தில் இருந்த இளம் பெண் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!