Tirupathur

News March 27, 2024

திருப்பத்தூர்: அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு

image

நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தாரி ஊராட்சியைச் சேர்ந்த மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளராக இருந்து வந்த கே ஜி ரமேஷ் என்பவர் இன்று திடீரென பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சம்பவம் மாவட்டத்தில் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவுக்கு மாவட்டத்தில் தீயாக வேலை செய்த முக்கிய புள்ளிகளில் இவரும் ஒருவர்.

News March 27, 2024

திருப்பத்தூர்: அதிமுக நிர்வாகியால் சலசலப்பு

image

நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவர் அதிமுகவில் தொண்டராக பணியாற்றி தற்போது திருப்பத்தூர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட கழக செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக கழக செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை முன்னாள் அமைச்சருக்கு‌ அனுப்பி வைத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 27, 2024

வாணியம்பாடி காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண்

image

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுக்க சென்ற பெண் திடீரென மயங்கி விழுந்ததால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் பணியாற்றி போலிசார் முதலுதவி சிகிச்சை அளித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .காவல் நிலையத்தில் வரும் பொது மக்களிடம் பெறும் புகார்களை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 27, 2024

விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி மோகனா நேற்று 26 ம் தேதி இரவு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்
இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 27, 2024

திருப்பத்தூர்: அம்மையப்ப நகரில் கும்பாபிஷேக திருவிழா

image

நாட்றம்பள்ளி தாலுகா கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கசிநாயகன்பட்டியை அடுத்த முருகப்ப நகரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. வேத பண்டிதர்களால் யாக சாலை அமைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழாக்குழுவினர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன

News March 26, 2024

ஒரே கட்டடத்தில் அனைத்து கட்சிகளின் சின்னம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கருப்பூரில் உள்ள கட்டிடம் ஒன்றில் 26.03.2024 இன்று மாலை கட்டிட உரிமையாளர் அனைத்து கட்சிகளுக்கும் சாதகமாக அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சியின் சின்னங்களை ஒரே கட்டடத்தில் வரைந்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பையும் பேசப் பொருளாகவும் ஏற்பட்டுள்ளது.

News March 26, 2024

திருப்பத்தூர் அருகே மாவட்ட எஸ்பி ஆய்வு

image

திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் கந்திலி, செவ்வத்தூர், தாதன் குட்டை மற்றும் காக்கங்கரை ஆகிய வாக்குச்சாவடிகளிலும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடப்பள்ளி பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளையும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

News March 26, 2024

திருப்பத்தூர் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது

image

அட்டியாவில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வட மாநில வாலிபர்கள் 2 பேர், 10 கிலோ அளவில் கஞ்சா கடத்திச் சென்று இன்று  ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு பெங்களூர் நோக்கி பேருந்தில் செல்வதாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீசார் கந்திலி அருகே 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News March 26, 2024

திருப்பத்தூரில் கலெக்டர் ஆய்வு

image

தமிழக முழுவதும் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. இதனையடுத்து இன்று திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு மையங்களில்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ, மாணவிகள் எழுதினர். இதனை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் திடிரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 26, 2024

மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வடச்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று(மார்ச்.26) அதிகாலை தனியார் நிலத்தில் அரசு அனுமதி இன்றி மணல் மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது ‌செய்த போலீசார் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து உமராபாத் போலீசார் மற்றும் ஆம்பூர் தாலுகா வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

error: Content is protected !!