India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை சுமாா் 20 முறை மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. மாதந்தோறும் பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கொரட்டி பகுதியில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வரும் 21ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி மற்றும் மே தினம் 1ஆம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி, மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி தாலுகா பெத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ.2.38 லட்சத்தை வீசிவிட்டு கட்சி நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தனர். இவர்கள் யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையிலான குழு பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி இன்று காலை 10 மணியளவில் மகளிர் திட்டத்தின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரையும் நிகழ்வினை ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். மகளிர் திட்ட அலுவலர் பிரியா உடன் இருந்தார்.
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருவராஜபாளையம் பகுதியில் நேற்று அனுமதியின்றி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொண்டார். இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் ஏ.சி.சண்முகம் உட்பட 10 பேர் மீது வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பெரியாங்குப்பம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டிகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் இன்று காலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியாங்குப்பம் ஊராட்சி பகுதியில் ராதிகா (34) ,சந்திரன் (42) ஆகிய 2 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் கேத்தாண்டபட்டி பகுதியில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக செல்லும் சரக்கு ரயில் 22 ஆவது பெட்டி சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு தரையில் சென்றுள்ளது. ரயிலின் இன்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக வண்டியை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில்கள் தாமதமாக செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில் சித்திரை விஷு கனி நாளான இன்று ஐயப்பன் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் முக்கிய நிகழ்வாக இன்று இரவு ஐயப்பன் திருக்கோயில் ஐயப்பன் பக்தி பஜனை நடைபெறுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் பெரியாங்குப்பம் காமன் தட்டு மலைப்பகுதி மற்றும் நாயக்கனேரி மலைப்பகுதி, பனங்காட்டேரி மலை பகுதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர், தர்மபுரி சாலை குனிச்சி கிராமத்தில் நேற்று இரவு 8 மணியளவில் தேர்தல் அலுவலர்கள் தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கோவிந்தசாமி மகன் பூபதி என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.100000 பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.