Tirupathur

News February 18, 2026

மாணவிக்கு உதவிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அலசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி பிரேமலதா கல்விக்கடன் கோரி மனு அளித்தார். மாணவியின் நிலையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் தனது விருப்ப நிதியிலிருந்து இரண்டாம் ஆண்டு கல்வித் தொகையான ரூ. 1,80,000/- க்கான காசோலையை உடனயடியாக வழங்கினார்.

News February 18, 2026

காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வழங்கி வருகிறது.
​அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்ரவரி 18), சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. “18 வயதிற்கு முன் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதம்” என்றும், இதில் பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News February 18, 2026

திருப்பத்தூரில் 250 கோழிகள் இலவசம்!

image

திருப்பத்தூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

திருப்பத்தூரில் EB பில் எகிறுதா..?

image

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

திருப்பத்தூர்: ரயிலில் அடிப்பட்டு சிதறி உடல்

image

ஆம்பூர் விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று (பிப்.17) இரவு சுமார் (60) வயது தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 18, 2026

திருப்பத்தூர்: குடும்ப தகராறில் மனைவி தற்கொலை

image

ஜோலார்பேட்டை அருகே சின்னகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி கீதா (35), கணவன் மனைவிக்கு நேற்று (பிப்.17) குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கீதா வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து தனது வீட்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆம்பூர் அருகே ரயிலில் அடிப்பட்டு மூதாட்டி பலி

image

ஆம்பூர் ரயில் நிலையம் அருகே இன்று (பிப்.17) சுமார் 60 வயது தக்க மூதாட்டி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் குறித்து விசாரணை.

News February 18, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!