Tirupathur

News February 19, 2026

திருப்பத்தூர்: தேர்வு முடிவுகள் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்வு எழுதிய எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று பிப்ரவரி 19, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களும், மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தெரியப்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்தார்.

News February 19, 2026

திருப்பத்தூரில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (TAICO), TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

News February 19, 2026

ஆம்பூரில் கொடுமை!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் மூட்டு கொள்ளை பகுதியில் நேற்று (பிப்ரவரி 18) மாலை 6 வயது சிறுமியிடம் சேய்த அசாத் (40) என்பவர் பாலியில் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவரை ஆம்பூர் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிறுமிக்கு நடந்த இந்த கொடுமையால் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 19, 2026

ஜோலார்பேட்டை அருகே இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

image

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் சேர்ந்தவர் சுதாகர் என்பவர் தனது வீட்டின் அருகில் நேற்று (பிப்.18) நின்று கொண்டிருக்கும் பொழுது வழி பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு சேர்ந்த முருகன் உள்ளிட்ட 2 பேர் சுதாகர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர்.‌ படுகாயம் அடைந்த சுதாகர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறார்.

News February 19, 2026

திருப்பத்தூர்: கணவனை நடுரோட்டில் அடித்து உதைத்த மனைவி!

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த எம் ஆர் செட் அருகே இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. திருமணம் ஆனதை மறைத்து 2வது திருமணம் செய்த கணவரை, அவரது முதல் மனைவி நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார். இதனால் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 19, 2026

ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் போலிஸ் படுகாயம்

image

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் சேர்ந்தவர் அமிதா பானு இவர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கணக்காளர் அலுவலகத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார்‌. இந்நிலையில் இன்று (பிப். 18) பொன்னேரி அருகே மொபட்டில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அமிதா பானு படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வை

News February 19, 2026

திருப்பத்தூர்: தவிக்க விட்ட மகன்; தூக்கில் தொங்கிய அப்பா!

image

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் மகன் கோபி பிரிந்து சென்ற ஏக்கத்தில் காமராஜ் உற்று (பிப்.18) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 19, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 19, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 19, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!