Tirupathur

News June 2, 2024

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!

image

மாதனூர் அடுத்த தர்மகொண்ட ராஜா திருமலை திருக்கோயில்
வெங்கிலி மலைக்கு பின்புறம் உள்ள காடுகளில் மலையின் மீது அமைந்துள்ளது. அழகிய குளமும் அமைதியான சூழலும் இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது.‌ நேற்று சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News June 1, 2024

திருப்பத்தூர் : நாளை மழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூரில் நாளை, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News June 1, 2024

ஜீன்.5 இல் விவசாயிகள் செயற்குழு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா
விவசாயிகள் சங்கம் சார்பில் நாட்றம்பள்ளி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் 05-06-2024 அன்று செயற்குழு ‌கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளும் தங்களது மொபைல் போன் கொண்டு வரவேண்டும் சங்கத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News June 1, 2024

திருப்பத்தூர்: 1 ஆம் வகுப்பு 5,250 மாணவர்கள் சேர்க்கை

image

திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நகராட்சி மற்றும் நாட்றம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டு புதியதாக 1ம் வகுப்பில் 5,250 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

திருப்பத்தூர்: டிரைவருக்கு நெஞ்சு வலி! தாறுமாறாக ஓடிய லாரி

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலதை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் நேற்று(மே 31) தி.மலையிலிருந்து லாரியில் சிமென்ட் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தார். வாணியம்பாடி மெயின் ரோட்டில், கலெக்டர் அலுவலகம் முன்பு சென்றபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. உடனே லாரியை நிறுத்தி, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

News June 1, 2024

திருப்பத்தூர்: அதிமுக வேட்பாளர் நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அதிமுக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பசுபதி, அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் 01.06.2024(இன்று) நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு கட்டாயம் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் பல்வேறு ஆலோசனைகள் வழங்க உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

இந்திய அரசின் விருதுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

இந்திய அரசின் சார்பில் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு மைய அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு ஜூன் 28 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பங்களை செலுத்துமாறு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News May 31, 2024

குரூப். 1 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்

image

தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வுக்கான 90 காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குரூப் 1 தேர்வில் கலந்துகொண்டு தேர்வினை எழுத மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய பேட்டை பகுதியில் இன்று டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் புகைப்பிடித்ததால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இதனால் பல்வேறு நோய் தோற்று ஏற்படுதல் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News May 31, 2024

திருப்பத்தூர் மழைப்பொழிவு விவரம்

image

திருப்பத்தூரில் நேற்று (மே.30) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!