Tirupathur

News May 19, 2024

நாட்றம்பள்ளி: பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்

image

நாட்றம்பள்ளி அருகே கொத்தூரை சேர்ந்தவர் பாஸ்கர் (38). இவர் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரிடம் கடந்த சில மாதங்களாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் பெண் போலீசார் கடந்த சில தினங்களாக பாஸ்கரிடம் பேச வில்லை. இதனால் பெண் போலீசாரின் செல்போனுக்கு கொலை மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் பாஸ்கரை கைது செய்தனர்.

News May 19, 2024

அவசர உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகள்! 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் அவசர உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அவசர உதவி எண் 100-க்கு வரும் அழைப்புகளில் குடும்ப தகராறு காரணமாக வரும் அழைப்புகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என சம்பந்தப்பட்ட 30 நபர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி அவர்களிடம் நிறை, குறைகள் கேட்டறியப்பட்டன .

News May 19, 2024

ஜோலார்பேட்டை அருகே காசு வைத்து சூதாட்டம் ஆடியதாக 7 பேர் மீது வழக்கு பதிவு

image

ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் அப்போது மாக்கனூர் சுடுகாட்டு அருகே காசு வைத்து சூதாட்டம் ஆடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது போலிசார் விரைந்து சென்ற சோதனை செய்ததில் சக்திவேல், கவியரசன், கௌதம் உள்ளிட்ட 7 பேர் காசு வைத்து சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்ததாக போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை.

News May 19, 2024

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் தவறி விழுந்தவர் பலி

image

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே காட்பாடியில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் ரயிலில் பயணம் செய்த 25 வயது இளைஞர் படிக்கட்டில் தனது செல்போன் பார்த்துக் கொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது, தவறி விழுந்த நபர் அதே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர்.

News May 18, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் 91.76 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.76 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 75.74 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News May 18, 2024

இடி விழுந்ததில் 2 பசுமாடுகள் பலி: இருவர் படுகாயம்

image

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே வெள்ளைகுட்டை கிராமத்தில் இன்று  இடி விழுந்ததில் சரவணன் என்பவரின் நிலத்தில் கட்டி வைக்கப்பட்ட 2 பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இடி விழுந்ததில் சரவணன்(40), அவரது மகன் ரஞ்சித்(20) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 18, 2024

திருப்பத்தூர் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

திருப்பத்தூர் அருகே தீ விபத்து

image

கந்திலி ஒன்றியம் தோரணம்பதி ஊராட்சி குமாரம்பட்டி பகுதியில் திவாகர்நாத் என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் சாம்பிராணி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று விடியற்காலை 3 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

News May 18, 2024

ஆம்பூர்: மர்ம நபருக்கு வலைவீச்சு

image

ஆம்பூர் நகரத்தில் சாண்றோர்குப்பம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு  முன்பு நள்ளிரவு 2 மணி அளவில் பைக் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆம்பூர் நகர போலீசார் விசாரை மேற்கொண்டனர்.  அப்பகுதியில் உள்ள சிசிடிவி சோதித்தபோது ப்ளூ கலர் அணிந்த மர்ம நபர் முகத்தை மூடி செல்லும் காட்சி பதிவானது. அவர் யார், எந்த ஊர் என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

News May 18, 2024

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட பஜார் போஸ்ட் ஆபீஸ்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா மெயின் ரோடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே இயங்கிய பஜார் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. அண்மையில் பல ஊர்களில் அஞ்சலகங்கள் மூடப்பட்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், ஆம்பூரில் பஜார் போஸ்ட் ஆபீஸ் மூடப்பட்டது மக்களில் பல பேருக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!