Tirupathur

News July 1, 2024

மகளிர் உரிமை துறை சார்பில் 45 தையல் எந்திரங்கள் வழங்கல்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 45 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி ஆகியோர் இருந்தனர்.

News July 1, 2024

குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கல்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; திருப்பத்தூா் மாவட்டத்தில் 94,868 குழந்தைகளுக்கு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், வைட்டமின் – ஏ சத்து குறைபாடு நோய்களைத் தடுக்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ திரவம் வழங்கும் முகாமானது இன்று(ஜூலை 1) முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

ஆம்பூரில் இறந்த பெண் காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி

image

திருப்பத்தூர், ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த பரிமளா என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவருடன் ஒன்றாக காவல் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள் ஒன்றிணைந்து பெண் தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு நேற்று 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

News June 30, 2024

திருப்பத்தூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும், தங்கள் நிலங்களில் பயிரிடும் நிலக்கடலை, ராகி, துவரை, சாமை உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய, கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலகத்திற்கு சென்று காப்பீடு செய்து கொள்ள மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 29, 2024

தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்திற்கு பாராட்டு

image

திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம் சேவை, நிகர லாபம் கொண்ட சங்கமாக மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு கடந்த 26ஆம் தேதி கேடயம், பாராட்டு சான்றிதழ் ரூ.20,000 வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சங்க செயலாட்சியர் கோபிநாத், செயலாளர் கோவிந்தன் ஆகியோர் மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

News June 29, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பெயரில் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், AI தொழில்நுட்பம் மூலம் பல்வேறு சைபர் குற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே மக்கள் அதில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

News June 29, 2024

பாலாற்றில் கழிவுநீர்: தடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாலாற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராத வகையில் நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜிடம் வலியுறுத்தப்பட்டது.

News June 28, 2024

ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது –  ஆட்சியர்

image

திருப்பத்தூர் ஆட்சியர் தர்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தால் திறமையான குழந்தைகளை பாராட்டி, இளம் துணிச்சலான குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதிவாய்ந்த நபர்கள் https://awards. gov.in என்ற இளையதளத்தில்  ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News June 28, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஆட்சியர்

image

விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (ஜூன்.28) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஆட்சியர்

image

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (ஜூன்.28) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!