Tirupathur

News July 4, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எங்கள் நிறுவனம் சார்ந்த வலைதள பக்கங்களை லைக் மற்றும் ஷேர் செய்தால் சுலபமாக பணம் ஈட்டலாம் என பொய்யாக விளம்பரப்படுத்தி மக்களை நம்பவைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2024

திருப்பத்தூர்: பிரபலம் நாளை வருகை

image

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழா நாளை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனை தொடர்ந்து நாளை மாலை 6 மணியளவில் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி மற்றும் விஜய் டிவி புகழ், அறந்தாங்கி நிஷா ஆகியோர் பங்கேற்கும் இசை நடனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News July 4, 2024

திருப்பத்தூர்: விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு BA, BCA, B.com ஆகிய பட்டப்படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் விண்ணப்பிக்காத மாணவ மாணவிகள் கல்லூரியில் சேரும் வகையில் நாளை (ஜூலை 5) வரை TNGASA என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரில் வந்து விண்ணப்பிக்கவும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

காவல்துறை சார்பில் அவசர உதவி எண்கள் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. SP அலுவலக உதவி எண் 94429-92526, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04179-221104, தனி பிரிவு அலுவலக உதவி எண் 04179-221103, போதைப்பொருள் குறித்து இரகசிய தகவல் அளிக்க 91599-59919, மூத்த குடிமக்கள் உதவி எண் 94862-42428, SP அலுவலக முகாம் உதவி எண்
04179-221105 ஆகிய எண்ணிற்கு மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News July 3, 2024

திருப்பத்தூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம் 208 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாடப்பள்ளி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் பங்கேற்றார். ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் என ஆட்சியா் அறிவித்தார். மாவட்டம் முழுவதும் 3,500 வீடுகள் கட்டுவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பழுதடைந்த வீடுகளை சீரமைப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News July 3, 2024

திருப்பத்தூர்: இலவச மதிய உணவு வழங்கிய ஆட்சியர்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிக்கான குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இவர்களுக்கு நேற்று மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் இலவச மதிய உணவு வழங்கி பரிமாறினார். உணவு வழங்கிய ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

News July 2, 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாயவிலைக் கடையில் ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூலை மாதம் வரை பெற்றுக் கொள்ளலாம் என திருப்பத்தூர் ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கு முறையாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

News July 2, 2024

தேவாலயங்களை பழுதுபார்க்க நிதி உதவி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 2, 2024

திருப்பத்தூர்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 1) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதோடு , நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்ட நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 1, 2024

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் அங்கன்வாடி மையத்தில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் – ஏ திரவம் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம், ஓஆர்எஸ் பவுடர் மற்றும் துத்தநாக (Zinc) மாத்திரைகளை வழங்கினார்.

error: Content is protected !!