Tirupathur

News July 14, 2024

யானையை வனப்பகுதிக்கு விரட்ட ஆட்சியர் உத்தரவு.

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியில் நேற்று இரவு முதல் ஒற்றை கொம்பு காட்டு யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சுற்றி திரியும் ஒற்றை கொம்பு யானையை ஊருக்குள் நுழையாதவாறு அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வனத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News July 14, 2024

ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் இன்று வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் படகு இல்லம், இயற்கை பூங்காவில் குடும்பம் குடும்பமாக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 14, 2024

திருப்பத்தூரில் மழை

image

திருப்பத்தூரில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜெய்பீம் நகர், வள்ளுவர் நகர், பாச்சல், ஆசிரியர் நகர், அச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் நண்பகல் முதல் சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள குளிர்ந்த சூழலால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 14, 2024

திருப்பத்தூரில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கேரளா உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 14, 2024

கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி

image

தி.மு.க இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டியில் கலந்து கொள்ள திருப்பத்தூர் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் போட்டியில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 18 – 35 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் www.kalaignar100pechu.org என்ற இணையதளத்தில் ஜீலை.25 க்குள் பதிவு செய்ய வேண்டும்.

News July 14, 2024

கனமழையால் பொதுமக்கள் அவதி

image

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சில இடங்களில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விடிய விடிய மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் தூங்கமுடியாமல் அவதி அடைந்தனர்.

News July 13, 2024

 நாட்டியாலா நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை – எஸ்பி

image

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோலார்பேட்டை, கந்திலி மற்றும் குரிசிலாப்பட்டு ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நாட்டியாலா நடத்த அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னிசைக் கச்சேரி நடத்த அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 13, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் 110.30 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் நேற்று காலை 11 மணி முதல் இன்று காலை 11 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் 16.20 மி.மீ, நாட்றம்பள்ளி 2மி.மீ, வாணியம்பாடி 11.மி.மீ, காவலர் 7 மி மீ, ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 42.60 மி.மீ, ஆம்பூர் 31.50மி.மீ, என மொத்தம் 110.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 13, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் 752 பேர் ஆப்சென்ட்

image

திருப்பத்தூர் மாவட்டம் குரூப்-1 தேர்வில் மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 2678 நபர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வு மையங்களை முழுமையாக வீடியோகிராபி மூலம் கண்காணிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 10 தேர்வு மையங்களில் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 752 நபர்கள் பங்கேற்கவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News July 13, 2024

திருப்பத்தூரில் குரூப் 1 தேர்வு: ஆட்சியர் ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். உடன் சம்பந்தப்பட்ட தேர்வு மைய பொறுப்பு அலுவலர் மற்றும் பலர் இருந்தனர்.

error: Content is protected !!