India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்பி கதிர் ஆனந்த் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துவருகிறார். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் நேற்று மாலை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநான் தலைமையில் மேல் குப்பம், வடச்சேரி, பாப்பனப்பள்ளி, சின்னபள்ளிகுப்பம், வடகரை, வீராங்குப்பம் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களையும்,தொண்டர்களையும், நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் மாவட்ட முழுவதும் 16 குழுக்கள் ஆக பிரிந்து பல்வேறு பகுதிகளில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகன பதிவு எண் இல்லாமல் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் என 23 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து வாகன ஓட்டுனரிடம் அபராதம் வசூலித்தனர்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை மிதமான் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 16 அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் கட்டங்களை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நினைவில் கொள்க’ என்னும் தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் நிச்சயம் தலை கவசம் அணிய வேண்டும் என்றும், இது செலவு அல்ல நமது குடும்பத்தின் முதலீடு எனவும், எனவே எந்த வேலை செய்தாலும் அதற்கான பாதுகாப்பு கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தி உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையின் நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நன்றி அறிவிப்பு கூட்டம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், ‘சிந்தித்து செயல்படுங்கள்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு செய்தி நேற்று (ஜூலை 18) வெளியிடப்பட்டது. இதில் எந்த ஒரு வங்கியும் கடன் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்காது. போலியான கடன் செயலிகள் ஆவணம் இல்லாமல் கடன் தருவதாக கூறினால் அதனை நம்ப வேண்டாம் என காவல்துறை சார்பாக விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு குறும்படங்களை எடுத்து அனுப்ப காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் போட்டிக்கான கடைசி தேதி ஜூலை 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.