Tirupathur

News July 23, 2024

உள்ளாட்சி துறை சார்பாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி

image

திருப்பத்தூரை சேர்ந்த ஏகே மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக இரண்டு நாள் பயிற்சியானது நேற்று மாவட்ட ஊரக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சியின் வளர்ச்சிக்கு 9 கருப்பொருட்களை எவ்வாறு கையாள வேண்டும் என அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விளக்கினர்.

News July 23, 2024

கோரிக்கை மனு வழங்கிய நடன கலைஞர்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் திரைப்பட நடன நாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடன நாட்டிய கலை நிகழ்ச்சி நடக்க தடையில்லா உத்தரவு வழங்க வேண்டி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானிடம் கூட்டாகச் சென்று கோரிக்கை மனுவை வழங்கினர். இதில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

News July 22, 2024

அரசு பேருந்து இயக்கியதில் ரூ.37 லட்சம் வருமானம்

image

ஆடி மாதம் பெளர்ணமி முன்னிட்டு திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை பகுதிக்கு பொது மக்கள் கிரிவலம் செல்ல திருப்பத்தூர் பணி மனையில் இருந்து தமிழக அரசு சிறப்பு அரசு பேருந்து இயக்கியதில் ரூ.37 லட்சம் வருமானம் அரசுக்கு கிடைத்தது என திருப்பத்தூர் போக்குவரத்து கிளை மேலாளர் குமரன் இன்று தெரிவித்தார்.

News July 22, 2024

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான கரீப் ரபி மற்றும் சிறப்பு பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தினை செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல், மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி, கம்பு, ராகி, துவரை, சாமை ஆகிய வேளாண் பயிர்களும் வாழை, வெண்டை, தக்காளி, கத்தரி, மஞ்சள் மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News July 22, 2024

திருநங்கைகளுக்கு வட்டார அளவில் முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓய்வூதியம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், வீட்டுமனை பட்டா மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட சமூகநல அலுவலகத்தில் பதிவு செய்தும், வட்டார அளவில் நடைப்பெறும் முகாமில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 22, 2024

ஆட்சியரிடம் நடன கலைஞர்கள் மனு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடன நாட்டியாலயா நிகழ்ச்சி தடை செய்யப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இன்று திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நடன கலைஞர்கள் மீண்டும் நடன நாட்டியாலயா நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

News July 22, 2024

இளம்பெண் மத்திய ரிசர்வ் போலீசுக்கு தேர்வு

image

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டியைச் சேர்ந்தவர் தேவேந்திரன், இவரது மகள் அஹிஸ்தா மத்திய ரிசர்வ் போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான பயிற்சிகளை கர்நாடக மாநில பெங்களூர் ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் மூலம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வழி அனுப்பி வைத்தனர்.

News July 22, 2024

திருப்பத்தூரில் பாஜக மகளிரணி தலைவிக்கு வரவேற்பு

image

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தந்தபோது மாவட்டத் தலைவர் வாசுதேவன் தலைமையில் மாவட்ட, மண்டல், அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்து வரும் அம்ரித் பாரத் பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

News July 22, 2024

திருப்பத்தூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, புதுப்பேட்டை, வாணியம்பாடியில் இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை அந்தந்த கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு அரசு கோவில்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து நாட்றம்பள்ளி, புதுப்பேட்டையில் 37 பேரும், வாணியம்பாடியில் 30 பேரும் என 67 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

News July 22, 2024

திருப்பத்தூரில் செஸ் போட்டி: 512 பேர் பங்கேற்பு

image

உலக செஸ் தினத்தை (ஜூலை 20) முன்னிட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, இந்தியாவில் 83 இடங்களிலும், தமிழகத்தில் திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் செஸ் போட்டி நடந்தது. திருப்பத்தூரில் நடந்த போட்டிக்கு சர்வதேச நடுவரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான ஆனந்த் தலைமை தாங்கினார். போட்டியில் 512 பேர் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற 125 பேருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

error: Content is protected !!