India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட காவல்துறை இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுத்திட,வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை, குடும்ப பெண்களுக்கு பிரச்சனை குறித்து 181 இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூருக்கு விஜயராஜ் குமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை கண்காணிக்கவும், இயற்கை பேரிடர் காலங்களில் ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்த கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி அய்யாசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி.இவர் வீட்டில் 6 ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று கொட்டகையில் உள்ள ஆடுகளை அவிழ்த்து விட சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்த போது மூன்று ஆடுகள் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இறந்த ஆடுகள் சிறுத்தை கடித்து உயிரிழந்து இருக்குமா என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு பணி செய்யும் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது உடன் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் என்பவரிடம் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18 பேர் நேரில் சென்று இனிமேல் கள்ள சாராயம் விற்பனை செய்யமாட்டோம் என உறுதி அளித்தனர். மேலும் எங்களுக்கு வாழ்வாதார உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 43 பேர் இனிவரும் காலங்களில் மது விற்பனை செய்வது இல்லை.
திருப்பத்தூரில் 36 வார்டில் உள்ள குப்பை கிடங்கை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இங்கு நகராட்சி மூலம் குப்பைகளை சேகரித்து எடை போட கூடிய எடை மேடை, தனியாருக்கு உரியதாக இருப்பதால் அரசுக்கு நட்டம் ஏற்படுகிறது. எனவே நகராட்சி சார்பில் எடை மேடை இல்லாததால் உடனடியாக அமைக்க நகராட்சி ஆணையருக்கு இன்று கலெக்டர் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் மோகன் காந்தி, வரலாற்று ஆர்வலர் காணிநிலம் முனுசாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் அமை எழில் அவரது வீட்டில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 3.4 செ.மீ நீளமுள்ள போர்வாளை வைத்திருந்தை அறிந்து அவர்களிடம் இருந்த போர்வாளை பெற்றுக் கொண்டனர். இந்த வாள் நாயக்கர்களின் காலத்தை சேர்ந்தது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. லாட்டரி மற்றும் வெற்றி அழைப்புகளை (Prize winning Call) ஒரு போதும் உண்மை என நம்பி ஏமாறாதீர்கள் என கேட்டு கொண்டுள்ளது. மேலும் விழிப்புடன் இருப்போம், சைபர் மோசடிகளை தவிர்ப்போம் என பொது மக்களுக்கு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா சின்னவரிகம் ஊராட்சிக்குட்பட்ட பெங்களா மூலை பகுதியில் இரவு நேரங்களில் மண் திருட்டு நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.