Tirupathur

News August 5, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் தேதி அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற மாவட்ட கலெக்டர் முகாம் நடைபெறும் நாட்களை அறிவித்துள்ளார். அதன்படி நாட்டறம்பள்ளி மற்றும் ஆலங்காயம் பகுதியில் 6ம் தேதி மற்றும் 13, 20ஆம் தேதி, மாதனூரில் 6,9 மற்றும் 14 ஆம் தேதி, ஜோலார்பேட்டையில் 6, 13, 20, மற்றும் 27ஆம் தேதி, திருப்பத்தூர் மற்றும் கந்திலி 6,9,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

News August 5, 2024

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தியர் கைது

image

ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த ஹட்டியாவிலிருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பின் பக்கம் பொது பெட்டியில் சோதனை செய்ததில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரலால் நிலால்(28) என்பவர் 3 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனையெடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

News August 5, 2024

திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

அனுமதியின்றி ராட்டினங்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை

image

திருப்பத்தூர் அருகே பசலிக்குட்டை முருகன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவில் பொழுதுபோக்கிற்காக ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் அந்த ராட்டினம் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இனி ராட்டினங்கள் உரிய அனுமதியன்றி அமைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 4, 2024

அனுமதியின்றி ராட்டினங்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை

image

திருப்பத்தூர் அடுத்த பசிலிகுட்டை முருகர் கோவில் திருவிழாவில் நேற்று ராட்சத ராட்டினம் சாய்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் தீயணைப்புத் துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அனுமதியின்றி ராட்டினங்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 4, 2024

திருப்பத்தூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இன்று வரை 51% கூடுதல் மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்துள்ளது.

News August 4, 2024

உங்கள் நண்பரை பற்றி கூறுங்கள்

image

சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம திருப்பத்தூர் மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பதுஎன சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருப்பத்தூரில் உள்ள 3,31,183 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் செய்யவும்.

News August 4, 2024

திருப்பத்தூரில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

News August 3, 2024

திருப்பத்தூர் ராட்சத ராட்டினத்தில் 50 பேர் மீட்பு

image

திருப்பத்தூர் அடுத்த பசிலிகுட்டை கிராமத்தில் ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டது. இதில் ராட்சத ராட்டினம் எதிர்பாராத விதமாக திடீரென்று இன்று இரவு சாய்ந்தவாறு இருந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பதறிப் போய் கத்தினர். தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக 50க்கும் மேற்பட்ட உயிர்களை காயமின்றி காப்பாற்றினர். இதையடுத்து திருப்பத்தூர் காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிகிறது.

error: Content is protected !!