India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மூக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட தாயப்பன் வட்டம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட சாலையில் குவிந்துள்ளதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே பசுமை நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்கேன் செண்டர் நடத்தி அதில் கர்ப்பிணி பெண்களுக்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதித்து வந்தது அம்பலமானது. அங்கு சென்ற போலீசார் ஸ்கேன் செண்டரில் பணியாற்றிய ஐயப்பனை கைது செய்து இடைத்தரகர் மற்றும் உரிமையாளரை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் புதியதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் சிறிய வகை வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று பணிகள் நிறைவு பெறாமல் பாதியிலேயே திறக்கப்பட்டது. தற்போது கனரக வாகனங்கள் செல்வதால் மேம்பாலம் பாதிக்கும் வகையில் உள்ளது. நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வலியுறுத்தி பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி பகுதியில் வேலூர் திருப்பத்தூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நியூடவுன் பஸ் நிறுத்தம் அருகே பெண்ணின் பையை மர்ம ஆசாமிகள் யாரோ பறித்து சென்றனர்.அப்போது அந்த பெண் கூச்சல் போடவே அங்கிருந்த மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார்.இதனால் அந்த பையில் வைத்து இருந்த 7 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது வாணியம்பாடி போலிசார் விசாரிக்கின்றனர்.
ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் சென்னை பெங்களூர் சாலையில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென அருகில் இருந்த டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் மீது மர்மநபர்கள் சிலர் இன்று தீ வைத்ததால் சாலையில் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர்.
திருப்பத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் திருப்பத்தூர் அருகே கோனேரிக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் (47) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
வேலூர் அருகே மேல்பட்டியை சேர்ந்தவர் சசிலேகா (19) இவர் அதே பகுதியில் வசித்து வரும் வாலிபரை காதலித்து வந்த நிலையில் உறவினரான தாய்மாமனை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இன்று (ஏப்.1) மேல்பட்டி வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆலப்புழா – சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா வடச்சேரி ஊராட்சி கூட்டு ரோட்டில் நேற்று மாலை (மார்ச்.31) சின்னப்பள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ரியாஸ் (50) என்பவரது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பிரபு படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.