Tirupathur

News August 14, 2024

ஜோலார்பேட்டை அருகே LOVE ONE பாட்டிலில் பல்லி

image

ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர்(32) மற்றும் ஆரிப் நகர் சேர்ந்த ரியாஸ்(40) ஆகிய இருவரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் 10 ரூபாய்க்கு லவ் ஒன் வாங்கி ஒரே பாட்டிலில் இருவரும் குடித்து உள்ளனர். அப்போது பாட்டிலில் இறந்து போன பல்லி இருந்ததை கண்டு வாந்தி எடுத்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News August 14, 2024

திருப்பத்தூரில் மதுபானங்களை விற்க தடை

image

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் என அனைத்தும் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் அறிவிப்பை வெளியிட்டார்.

News August 13, 2024

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

image

சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர்கள் தலைமையில் இன்று 1 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்நிலைய வளாகம், வாகன நிறுத்தம், இரயில் வண்டிகள் மற்றும் நுழைவு வாயில் ஆகிய பகுதிகளில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டிவ் கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர்.

News August 13, 2024

திருப்பத்தூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வரும் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

ஜோலார்பேட்டை வழியாக நாளை சிறப்பு ரயில் இயக்கம்

image

சென்னை ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் கொச்சி வேலி வரை 2 சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் நாளை மற்றும் 21 ஆம் தேதி சென்னையில் இருந்தும், நாளை மறுநாள் 15 ஆம் தேதி மற்றும் 22 ஆம் தேதி கொச்சி வேலியில் இருந்தும் சென்னை வரை இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில் ஜோலார்பெட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 13, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.05 மணியளவில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில் ஆட்சியர் தர்ப்பகராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். மேலும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கௌரவிப்பதுடன் அரசு நலத்திட்ட உதவிகளை பயனர்களுக்கு வழங்கவுள்ளார். இதில் பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News August 13, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, கந்திலி, ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருக்கவும், பள்ளி மாணவ மாணவிகள் குளங்கள், ஏரிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

News August 13, 2024

திருப்பத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் படித்த ஆண் பெண் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை (16.08.24) அன்று காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 13, 2024

ஆம்பூரில் நேற்று அதிகபட்சமாக 57.10 மி.மீ மழை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக ஆம்பூரில் 57.10 மி.மீட்டர் மழை பெய்தது. குறைந்த பட்சமாக கேத்தாண்டப்பட்டியில் 1.50 மி.மீ மழை பெய்தது. மேலும், வடபுதுப்பட்டு 48.20 மி.மீ, வாணியம்பாடி 23 மி.மீ, நாட்டறம்பள்ளி 15 மி.மீ, கேத்தாண்டபட்டி 1.50 மி.மீ, திருப்பத்தூரில் 18.60 மி.மீட்டர் மழை பெய்ததாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் எஸ்.பி

image

திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் எஸ்.பியாக ஷ்ரேயா குப்தா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர், இன்ஸ்பெக்டர்கள், உள்பட பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவர் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் ரேங்க் பெற்று தேர்ச்சிப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!