India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்தின் மூலம் நீர் பாசன குழாய் அமைத்து கொடுக்கும் நிறுவனங்கள், விவசாயிகள் பெயரில் ஆவணங்களை பெற்று கொண்டு சரியாக குழாய்களை அமைக்காமல் அமைந்தது போன்று படம் பிடித்து மோசடி செய்வதாக குற்றம் சாட்டினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தர்ப்பகராஜ் உறுதியளித்துள்ளார்.
திருப்பத்தூரில் இன்று பல்வேறு பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அம்பலூர், வாணியம்பாடி டவுன், கேத்தண்டபட்டி, ஏலகிரி மலைகள், மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர், சின்னவரிகம், பெரியவாரிகம், ஜோலார்பேட்டை, ஆசியார் நகர் குறிசிலாப்பேட்டை, மூலக்காடு, ராமாபுரம், டிபி பாளையம், பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருப்பத்தூர் மாவட்டம் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வேளாண்துறை அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க விழிப்போடு இருப்போம், சைபர் குற்றங்களை தவிர்ப்போம் என்றும் மேலும் ஆன்லைன் மோசடிகள் குறித்து புகார் இருந்தால் WWW.CYBERCRIME.GOV.IN என்ற இணையதளத்திலும் 1930 என்ற எண் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மல்லபள்ளி ஊராட்சியில் ஜல்லி தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம் என்று ஊர் பொதுமக்கள் புதுப்பேட்டை டு வெலக்கல்நத்தம் செல்லும் வழியில் சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனே அங்கு விரைந்த வருவாய் துறையினர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவில், 392 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 309 அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
திருப்பத்தூர் அதிமுக Ex MLA ரமேஷ் (58) மாரடைப்பால் காலமானார். உடல்நலம் பாதிப்பால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. எம்ஜிஆர், ஜெ.,வின் தீவிர விசுவாசியான இவர், அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவரது மறைவிற்கு, இபிஎஸ், திமுக எம்எல்ஏ நல்லதம்பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கியை ஆலங்காயம் வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து ஆலங்காயம் போலீசார் மற்றும் குற்ற பிரிவு ரகசிய போலீசார் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (16.08.2024) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்று பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தினமான இன்று திருப்பத்தூரில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தர்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் என அனைத்தும் நாளை காலை 12.00 மணி வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.