India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கானமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திங்கள் தன குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு 6,000 ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கர வாகனத்தையும் 1,000 ரூபாய் மதிப்பிலான ஊன்றுகோல்களையும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் இனிய மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
இந்திய பிறப்பு, இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி 2001 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தையின் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள பெயரில்லா சான்றிதழை உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுனர் உரிமம்) வருகிற டிசம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பிறப்பு சான்றிதழை பெறலாம் என கால அவகாசத்தை நீடித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் கடந்த வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்த நிலையில், அவருடைய படத்திறப்பு நிகழ்விற்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி வருகின்ற 21.08.2024 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் காக்கங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வருகை தர உள்ளதாக திருப்பத்தூர் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
வாணியம்பாடி தாலுக்கா வளையாம்பட்டு, கிரிசமுத்திரம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று மதியம் கனமழை பெய்தது. இந்நிலையில் தோல் தொழிற்சாலை கழிவுகள் மழை நீருடன் கலந்து பாலாற்றில் வெள்ளை நுரை ததும்பி செல்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏ.கே. மோட்டூர் ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் சீர்வரிசையாக வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்வானது ஏ.கே. மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலு தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று குழந்தைகளுக்கு தேவையான நாற்காலிகள், பாய், விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
திருப்பத்தூர் மாவட்டம் நியூ பெத்த லேகியம் 3வது தெருவை சேர்ந்தவர் நாக மகன் பவுன்(19). அதே பகுதியை சேர்ந்த திருமலை மகன் சந்திரசேகர்(22). இவர்கள் நேற்றிரவு ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 28 வயது மதிக்கதக்க ஒரு பெண்னை பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் இருவரையும் இன்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் சாகச விளையாட்டு மையம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கா,ராமச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். இதை மனதில் கொண்டு வரும் காலங்களில் கோடைவிழா நடத்தப்ப்டும். மேலும் புங்கனூர் ஏரியை மேம்படுத்த ரூ.1கோடி 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல்துறை இன்று மாலை 5 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: பொதுமக்கள் தங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் போலியான குறுஞ்செய்தி மற்றும் அதன் லிங்குகளை தொட்டு ஏமாற வேண்டாம். இதனால் தாங்கள் இழப்பை சந்திக்க நேரிடலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
Sorry, no posts matched your criteria.