India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விண்ணமங்கலம் 74வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு அரை மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு, வாக்கு பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்காளர்கள் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இன்று(17ம் தேதி) ஏற்பட்ட சாலை விபத்தில் தலைமை பெண் காவலர் பரிமளா உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் இறந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ஜோலார்பேட்டை பால்னாங்குப்பம் மலையடிவாரத்தில், மச்சக்கண் வட்டம் பகுதியில் மோகன் என்பவர் வீட்டின் அருகே நேற்று(ஏப்.16) இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரக அலுவலர் சோலை ராஜன் தலைமையில், வனத்துறையினர் இன்று(ஏப்.17) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடி நடமாட்டம் குறித்து முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் மலையடிவாரத்தில் நேற்று இரவு ஏலகிரி காட்டில் மச்சகண் வட்டம் பகுதியில் மோகன் என்பவரின் வீட்டின் அருகே நாய்கள் தொட்ர்ந்து குறைத்து கொண்டிருந்தது. மோகன் வெளியே வந்து பார்த்து போது கரடி ஒன்று நடமாடியதை பார்த்த அவர் கூச்சலிட்டுள்ளார்.சத்தம் கேட்ட கரடி அங்கிருந்த காட்டுக்குள் சென்று விட்டது. இதனால் பொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் லால் பாக் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 17 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை – மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் சென்னையில் இருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்பட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் புறப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை செவ்வத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சாகுல் என்பவர் தவறி விழுந்து அடிபட்டு மயங்கி கிடந்தார். பின்னர் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் அடுத்த மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பாவாடைக்காரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கியது. நேற்று அம்மன் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனுரில் மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி தலைமையில் வாக்கு சேகரித்தார். அப்போது சின்ன மூக்கனூர் பகுதியில் பாஜகவுடன், பாமக கூட்டணி வைத்ததால் விரக்தி அடைந்த இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் சின்ன மூக்கனூர் வார்டு உறுப்பினர் சிரஞ்சீவி தலைமையில் ஒன்று திரண்டு மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.
Sorry, no posts matched your criteria.