India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் செப் 5 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசு ரேஷன் பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ரேஷன் பணியாளர்களின் 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி மாநில அளவில் வேலை நிறுத்தப்போராட்டம் நடக்கிறது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்–கில் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர், 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.வாசித்தலில் பின்தங்கிய மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்களின் வாசிப்பை முன்னேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் இன்று மாலை சந்தேக மரண வழக்குகளில் இயற்கை மாறான மரணங்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்கு விசாரணையின் போது புலனாய்வு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பலர் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் துறை இன்று தனது முகநூல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பேனரில் இணையதளத்தில் பல போலியான நிறுவனங்கள் பெயரில் மோசடி நபர்கள் வலம் வருகின்றனர். அவர்கள் முதலீடு செய்தால் இருமடங்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றி விடுவார்கள். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் மாவட்ட காவல் துறையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு குழு உதவி ஆய்வாளர் பழனி தலைமையிலான குழு மாவட்ட காவல் துறைகளுக்கு மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆம்பூர் தாலுகா மாதனூர் அடுத்த சாத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த முதியவர் கணேசன்(66) கூலி தொழிலாளி. அவருடைய மனைவி நவநீதம்(55). இவர்களுக்கு பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில் கடந்த ஆகஸ்ட் 29 அன்று பக்கத்து வீட்டை சேர்ந்த 3 பேர் அவர்கள் வசிக்கும் இடத்தை கேட்டு தராரத்தால் சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் நகர பகுதியைச் சேர்ந்த ரயான் என்ற வாலிபர் இன்று இரவு சென்னையில் தொடங்கவுள்ள ஃபார்முலா-4 கார் பந்தயத்தில் பங்கேற்கிறார். தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா-4 இரவு நேர கார் பந்தயம் இன்று தொடங்குகிறது. மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் நடைபெறும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஆம்பூர் வாலிபருக்கு திருப்பத்தூரைச் சேர்ந்தோர் வாழ்த்துக்கள் கூறுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்குழுவுக்கான தணிக்கை பத்திகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் கலந்துரையாடல் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டு வழங்கப்பட்ட இருக்கைகள் தரமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை அருகே கட்டேரி பைரவன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53) இவர் 10ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்ப்பதாக சுகாதார துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவர் செல்வநாதன் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலி மருத்துவர் கையும் களவுமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று எஸ்பி அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் சைபர் குற்றங்களை தடுக்க விழிப்போடு இருக்க கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக சைபர் எண் 1930 (அ)www.cybercrime.gov.in மூலம் தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.