India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே இன்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அண்ணன் தம்பி இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற கந்திலி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் நேற்று திருப்பத்தூர் மற்றும் ஆந்திர மாநில போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர். அரிசி கடத்தல், மண் கடத்தல், சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தல், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர இருமாநில போலீசாரும் முழு ஒத்துழைப்புடன் கூட்டாக பணியாற்ற வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் இரு மாநில போலீசார் இணைந்து குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பேனரில் தங்களது கைபேசி திருடப்பட்டாலோ அல்லது தவறவிட்டாலோ அந்த கைபேசியில் உள்ளமைக்கப்பட்ட எல்லா கணக்குகளின் கடவுச்சொற்களையும் உடனடியாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுக்ளது. இதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளின் துணையுடன் தனது நிலத்தை அபகரிக்க திருப்பத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நல்லதம்பி முயல்வதாக கூறி திருப்பத்தூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து எம்.எல்.ஏ. நல்லதம்பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாத்தூர் அடுத்த சாலூர் பகுதியில் பொது வழியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இன்று நடைபெற்ற திங்கள் தின குறை தீர்ப்பு கூட்டத்தில் சாலூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் மனுவை உடனடியாக அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு கல் குவாரி வேண்டும் என மல்லப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் தனி மாவட்டமாக மாறி 5 ஆண்டுகள் ஆகிறது. திருப்பத்தூரைச் சேர்ந்த மக்கள் வெளியூர் பயணங்களுக்கு பெரும்பாலும் ஜோலார்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்திற்கே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. திருப்பதூரில் ரயில் நிலையம் இருந்தும் பெரும்பாலான ரயில்கள் அங்கு நிற்பதில்லை. மாவட்ட தலைநகரமான திருப்பதூரிலே ரயில்களை நிற்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. உங்களின் கருத்து என்ன?
ஏலகிரி மலை போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் இன்று அத்தனாவூர் பகுதியில் வாகன சாவடி அமைத்து ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இன்று அதிகளவில் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு போலீசார் வாகன சோதனை செய்ததில் ஹெல்மெட் அணியாமல், ஒரு வாகனத்தில் 3 பேர் பயணம், உரிய ஆவணங்கள் இன்றி 125 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ஏழு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பத்தூரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் குறிப்பிடவும்.
Sorry, no posts matched your criteria.