Tirupathur

News May 2, 2024

பாலாற்றில் குளிக்க சென்ற இளைஞர் மாயம்

image

வாணியம்பாடி அடுத்த இராமையன்தோப்பு பாலாற்று பகுதியில் குளிக்க சென்ற பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பைஜான் நீர்மூழ்கி மாயமானர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இளைஞரை தேடி வருகின்றனர். வருவாய்த்துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 2, 2024

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கே வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

ஆம்பூர் அருகே திடீர் தீ விபத்து 

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ரூ.2 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முற்றிலும் இருந்து சேதமாகியது. இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 2, 2024

5 பேர் கைது: திடீர் திருப்பம்

image

நாட்றம்பள்ளி சமையனூரை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் நேற்று அஸ்வின், அபிஷேக், ரவி, ராகுல், ஆரிஷ் ஆகிய 5 பேரை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அஸ்வின் என்பவர் சரவணன் வீட்டின் அருகே உள்ள பெண்ணை காதலித்து வந்ததை சரவணன் பெண்ணின் தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

News May 1, 2024

திருப்பத்தூர் மழைக்கு வாய்ப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே.01) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) திருப்பத்தூரில் , இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

 ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

image

ஆம்பூர் அடுத்த மேல்சணாங்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஊராட்சி மன்ற சார்பில் குடிநீர் சீராக வழங்கவில்லை. பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

News May 1, 2024

திருப்பத்தூர்: நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு

image

திருப்பத்தூர் மாவட்டம் வழுதலம்பட்டு கிராமத்தில் நிலத்தகராறில் முதியவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பத் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் முதியவரின் உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட சம்பத்தை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

News May 1, 2024

குடிநீர் வழங்க கோரி முற்றுகை போராட்டம் 

image

ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் முறையாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 1, 2024

 3 பேர் அதிரடி கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று (ஏப்.30) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் ஆம்பூர் காங்கிரத்தியா பகுதியை சேர்ந்த லோகேஷ் (24), பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் (22), வாத்தி மனை பகுதியை சேர்ந்த முஜிபுர் அகமது (24) ஆகிய 3 கஞ்சா மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

News April 30, 2024

வாணியம்பாடி அருகே விபத்து 

image

வாணியம்பாடி அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கிரி சமுத்திரம் பகுதியில் சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புல்டோசர் எந்திரத்தின் மீது 45 பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில் 8 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.