India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை – திருநெல்வேலி இடையிலான ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையிலும், அதிவேகத்தில் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு இரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயிலில் வரும் ஜனவரி 11 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு அன்றிலிருந்து கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
திருப்பணிகரிசகுளத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(60), இவரது மருமகன் சுடலைமுத்து. கடந்த 29ம் தேதி சுடலைமுத்துக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மகள், மருமகன் ஆகியோரை சமரசப்படுத்த இசக்கிமுத்து வந்தார், அப்போது ஆத்திரமடைந்த சுடலைமுத்து தனது மாமனாரை கத்தியால் குத்தினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கிமுத்து நேற்று உயிரிழந்தார். பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி – எழும்பூர் வந்தே பாரத் ரயிலில் வரும் ஜன.15ஆம் தேதி அன்று முதல் 16 பெட்டிகள் கொண்ட ரயிலில் available என்று காண்பித்து இருக்கை காண்பிக்கவில்லை என்று மக்கள் அச்சப்படவேண்டாம். நீங்கள் முன்பதிவு செய்த பின்னர் CNF என்று வரும் வண்டி புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பாக இருக்கை எண் வரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய சைபர் கிரைம் போர்டல் மூலம் 1107 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 646 மனு ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. 40 குற்றங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 190 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.7 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்றனர்.
உச்சநீதிமன்றத்தில் மாஞ்சோலை மக்களுக்கு கூடுதல் மறுவாழ்வு திட்டங்கள் வேண்டி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மக்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட பின்னர், தமிழ்நாடு அரசின் பதிலுக்காக வழக்கு விசாரணை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வு திட்டம் குறித்து கூடுதல் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு தொழில் பள்ளிகள் (ஐடிஐ) தொடங்கவும் தொடர் அங்கீகாரம் பெறவும் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகளை இணைக்கவும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வரும் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்குமாறு கலெக்டர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு தொழில் பள்ளிகள் (ஐடிஐ) தொடங்கவும் தொடர் அங்கீகாரம் பெறவும் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகளை இணைக்கவும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. ஆட்சியர் அலுவலகத்தில் 40 துறைகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கார்த்திகேயன் தலைமையில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.2.மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் காலை 10.00 மணி அளவில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது.3.பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் காலை 10 மணி அளவில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது. *ஷேர்*
நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் இன்று(ஜன.10) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #காலை 9.45 மணிக்கு மாநகராட்சி பொங்கல் திருவிழாவில் பங்கேற்கிறார். #பிற்பகல் 3 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கிறார். #மாலை 5 மணிக்கு பல் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
Sorry, no posts matched your criteria.