India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் கூட்டம் நெல்லையில் அதிகரித்துள்ளது. இதை குறி வைத்து நெல்லை சந்திப்பு டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் புதியதாக அல்வா கடைகள் தோன்றியுள்ளன. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அல்வா கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரெட்டியார்பட்டியில் உள்ள நெல்லை அரசு அருங்காட்சியகம் அருகே அண்ணாமலை நகரில் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் 50க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர், தற்போது இதற்கான டிக்கெட் விற்பனைகள் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்துநாள்தோறும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இந்த நிதியாண்டில் மட்டும் நெல்லை அரசு மருத்துவமனையில் 23 ஆயிரத்து 575 பேருக்கு ரூ.27.61கோடி மதிப்பில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் செய்ததாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் கீழ்முன்னீர்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 108 ஆம்புலன்ஸில் பணி புரிவதற்கு டிரைவர், உதவியாளர் நேர்முகத் தேர்வு நாளை ஜன.13ஆம் தேதி திங்கள்கிழமை நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் 8925941973 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் அனைவரும் அசல் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். (பயனுள்ளவர்களுக்கு பகிரவும்)
நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்: காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை செந்தில் நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நகைச்சுவை அரங்கம் மற்றும் பொங்கல் கவியரங்கம் நடைபெற உள்ளது. செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் 9ம் திருநாளான இன்று பகல் 11:30 மணிக்கு தேரோட்ட வைபவம் நடைபெற உள்ளது. கோபாலசாமி கோயிலில் இரவு 7 மணிக்கு மேல் ராபர்ட் மூன்றாம் நாள் வழிபாடு நடக்கிறது.
பாளை வடக்கு சாலையை சேர்ந்த ரஞ்சன்(42). தொழிலதிபரான வீட்டில் 2.5கிலோ தங்க நாணயங்கள் கடந்து சில மாதங்களுக்கு முன்பு மாயமானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் இவரது வீட்டில் பாளை அண்ணாநகரை சேர்ந்த ஒரு பணிப்பெண் 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில் திருடி இந்த பகுதியில் சொந்த வீடு கட்டி வருவது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நெல்லையில் இருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகள் நேற்று சென்றன. சென்னையில் இருந்து 200 ,கோவை 40, திருச்சி 40 ,மதுரை 100பேருந்துகளும் ,விரைவு போக்குவரத்து கழகத்திலிருந்து 225 பேருந்துகளும் ,நெல்லை மாநகர பகுதியில் 45 டவுன் பேருந்துகளும் இயக்கப்படுகிறது .இதே போல் நெல்லை மாவட்டத்தில் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நெல்லையில் குழந்தைகள் நலன் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர், சிறப்பு சிறார் காவல்துறையில் 2 சமூக பணியாளர்கள் ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://tirunelveli.nic.in விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து ஜன.27 குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுகபுத்திரா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் மாநகராட்சிக்கு 2024-25 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், வாடகை போன்றவற்றை செலுத்துவதற்கு மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாளாகும் .எனவே வருகிறார் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மாநகராட்சியில் வசூல் மையங்கள் செயல்படும். எனவே இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் . *ஷேர்
பாளையங்கோட்டை ராஜா கோபாலபுரத்தை சேர்ந்தவர் மாணவி அனுஷா. இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது வீட்டின் அருகே ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் இடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை களம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார், இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவி அனுஷாவை நேற்று பாராட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.